20 ஜூன், 2010

வட மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பாராட்டு ஜனாதிபதியுடனான சந்திப்பில் அகாஸி




வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாராட்டுக்குரிய தென்றும் இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்து உதவுமென்றும் ஜப்பான் விசேட தூதுவர் யசூஷி அகாஸி தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கை களுக்குச் சமமாக, இலங்கை அரசு முறையாக திட்டமிட்ட ரீதியில் மீள் குடியேற்றங்களைச் செய்து வருகிறது. இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக் காக ஜப்பான் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்தார்.

இந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்திகள் மூலம் தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதுடன் திருப்திகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதைத் தான் கண்டதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அன்னியோன்ய நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அரசு மேற்கொள்கின்ற நடவடிக்கை தெளிவாகின்றதென்றும் அகாஸி தெரிவித்தார்.

அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்கா, ஜப்பான் தூதுவர் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக