25 மே, 2010

ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்ப உபயோகம் அவசியம்


தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சானது ‘விதாதா’ வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை நாடெங்கிலுமிருந்து உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

தொழில்நுட்ப அறிவை சகல கிராமங்க ளுக்கும் எடுத்துச் சென்று ஏற்றுமதி உற்பத்தியில் சர்வதேசத்துடன் போட்டியிடும் தொழில் முயற் சியாளர்களை உருவாக்குவதே அமைச்சின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 256 விதாதா வள நிலையங்களை உருவாக்கி 6,000 தொழில் முயற்சியாளர்களை குறுகிய காலத்தில் நாட்டிற்கு அறிமுகப்படுத்த முடிந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின்கீழ் மேற்படி செயற்திட்டம் முன்னெ டுக்கப்பட்டதுடன், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு வழங்க முடிந் துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறை அமைச்சின் எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்திய அமைச்சர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவிக்கையில், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு விஞ்ஞான ஆராய்ச்சிகள் மிக அவசியமாகின்றது. ஐரோப்பிய நாடுகளைப் போன்றே ஆசியாவில் ஜப்பான், தாய்வான், கொரியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் அபிவிருத்தியில் முன்னேற்றமடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் புதிய கண்டுபிடிப்புகளுமே காரணம்.

சர்வதேச சந்தையில் போட்டி போடுமளவுக்கு உயர் தொழில்நுட்ப செயற்பாடுகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. ஜப்பானின் உயர் தொழில்நுட்ப முன்னேற்றமே அந்நாடு முன்னேற்றமடையக் காரணமாயமைந்துள்ளது.

எமது ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் விஞ்ஞான ஆராய்ச்சிகளும் உயர் தொழில்நுட்ப உபயோகமும் மிகவும் அவசியமாகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக