15 பிப்ரவரி, 2010

வன்னிப் பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது மேலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.



வன்னிப் பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது மேலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. மருதோடை, வவுனிக்குளம், முள்ளியவளை, குமிழமுனை, ஆத்தான்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலேயே இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளைமோர் குண்டுகள் 05, ரி56 ரக துப்பாக்கி மற்றும் எம்.16 ரக துப்பாக்கி என்பவற்றுக்கான ரவைகள் மற்றும் ரி.என்.ரி வெடிபொருட்கள் உள்ளிட்ட மேலும் சில இராணுவ உபகரணங்களே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதவிர அடையாளம் தெரியாத நவீனரக பாரிய ஆயுதமொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது


இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கும் 

இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்தும்படி இந்திய மத்திய அரசாங்கத்தைக் கோரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய அதிகாரம் குறித்து ஏற்கனவே இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் தமிழக முதல்வர் கருத்துரைக்கையில், இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயற்படும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி  

குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மதியம் கிளிநொச்சியிலுள்ள உதயநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினை காரணமாக ஆத்திரமடைந்த கணவன் மனைவியின்மீது சரமாரியாக கத்தியால் குத்தியதாகவும், முதுகுப்புறமாக பலத்த கத்திக்குத்துக் இலக்கான எல்.அமிர்தகௌரி (65) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மட்டக்களப்பு நாவலடியில் இளம் யுவதியின் சடலமொன்றினை பொதுமக்களின் தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர்.


மட்டக்களப்பு நாவலடியில் இளம் யுவதியின் சடலமொன்றினை பொதுமக்களின் தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பெண் திருமலை தோப்பூர் பட்டித்திடலை சேர்ந்த செல்வராசா திலகவதி (29) என இனங்காணப்பட்டுள்ளார். இது கொலையா?, தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர் மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் தரம் ஒன்றில் கல்விகற்ற மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசிரியருக்கு 3வருட கடுழீய சிறைத்தண்டனையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி பொ.சுவர்ணராஜா விதித்துள்ளார். குற்றவாளிக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன்,பாதிக்கப்பட்டமாணவிக்கு ஒரு இலட்சத்து 50ஆயிரம் பணமும் வழங்கவேண்டுமென நீதிபதி பணித்துள்ளார். அத்துடன் இத்தீர்ப்பு குறித்து நீதிபதி தெரிவிக்கையில் குற்றம் புரிந்தவர்கள் சமூகத்தில் எந்நிலையில் இருந்தாலும் குற்றம் நிருபிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்கப்படுமென்பதற்கு ஒரு சான்றாகும் என்றார். இதேவேளை காத்தான்குடியில் தனது மனைவியை தீயிட்டுகொளுத்தி கொலை செய்த நபருக்கு 10 வருட கடுழிய சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார்.



பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் மூடப்பட்டிருந்த முக்கிய வீதிகளின் ஒன்றான பிரிஸ்டல் வீதி இன்றுமுதல் மக்களின் பாவனைக்காக
 

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் மூடப்பட்டிருந்த முக்கிய வீதிகளின் ஒன்றான பிரிஸ்டல் வீதி இன்றுமுதல் மக்களின் பாவனைக்காக முற்றாக திறந்து விடப்படவுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தவீதி கடந்த 24வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே பாவனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இரவுநேரத்தில் அது முற்றாக மூடப்பட்டிருந்தது. கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்தவீதி, கடந்த 1986ம் ஆண்டு சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலையடுத்து மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

அம்பாந்தோட்டையின் தங்காலை நகரில் ஜெனரல் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து ஜே.வி.பி இன்று எதிர்ப்பு நடவடிக்கை


அம்பாந்தோட்டையின் தங்காலை நகரில் ஜெனரல் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து ஜே.வி.பி இன்று எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தது. இதன்போது எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பொலீசாருக்குமிடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதன்போது இடம்பெற்ற தாக்குதலில் பொலீஸ் அதிகாரிகள் மூவர் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஆறுபேரைக் கைதுசெய்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் நகரில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதால் வீதியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்காத நிலையில் முறுகல்நிலை ஏற்பட்டதாகவும், இந்த நிலைமையில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பொலீசாரின் உத்தரவை மீறி செயற்பட்டதால் அவர்கள்மீது தடியடிப் பிரயோகம் நடத்த நேரிட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.



ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு

 

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாத்தறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். உண்மையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவே வெற்றிபெற்றார் என்றால் ஏன் பொதுத் தேர்தலில் மாத்திரம் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இது தர்க்கத்திற்குரிய விடயமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்குள்ளிருந்து மூன்று கைக்குண்டுக

அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்குள்ளிருந்து மூன்று கைக்குண்டுகள் பொலீசாரினால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட புலிச் சந்தேகநபர்கள் இருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த வீரக்கொடி தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட ஒருவரின் வீட்டிலிருந்தே இந்தக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக