பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார். இது குறித்து அதிபர் மகிந்த ராஜபட்ச சகோதரரும், பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபட்ச கூறியதாக மலேசியாவில் இருந்து வெளியாகும் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. எனவே, அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர் மீதான ராணுவ விசாரணை விரைவில் தொடங்கும். அவர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி ராணுவத்தில் பிளவை உண்டாக்க முயன்றார். ராணுவத்தில் அரசியலை நுழைக்க முயன்றார். தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார். இலங்கையில் ராணுவ ஆட்சி கொண்டு வர சதித் திட்டம் தீட்டினார். 2009 ஜனவரியில் பத்திரிகையாளர் லசந்தா விக்ரமதுங்கே கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் பொன்சேகா மீது சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும். லசந்தா விக்ரமதுங்கே கொல்லப்பட்டது தொடர்பாக உண்மை விரைவில் வெளிவரும். அமெரிக்கா, நார்வே மீது குற்றச்சாட்டு: அதிபர் தேர்தலில் பொன்சேகா பிரசாரத்துக்கு சில மேற்கத்திய நாடுகள் உதவி செய்துள்ளன. அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட நாடுகள் ஏராளமாக பணம் செலவழித்துள்ளன. இலங்கை அரசுக்கு எதிராக எழுத பத்திரிகையாளர்களுக்கு நார்வே அரசு பணம் கொடுத்துள்ளது என்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்றார். பொன்சேகாவுக்கு அமைச்சர் கண்டனம்: போர் சமயத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மைகளை வெளியிடுவேன் என பொன்சேகா கூறியதற்கு செய்தித் துறை அமைச்சர் லட்சுமண் யப அபேயவர்தனே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போர் சமயத்தில் நடந்தவை தொடர்பாக சர்வதேச அமைப்புகளிடம் கூறுவேன் என ஒருவர் கூறினால், அதுபோன்ற ராணுவ அதிகாரியிடம் விசாரணை நடத்த ராணுவத்துக்கு உரிமை உண்டு என்றார் அவர். பொன்சேகா இதுபோன்று பேசுவது துரோகமாகும் என ஆளும் கூட்டணியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சா கூறினார். மகிந்த ராஜபட்சவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பொன்சேகா கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரது மனைவி அனோமா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளுடனான போரின்போது இலங்கை அரசு அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது என மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிவில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றால் உண்மைகள் வெளிவரக் கூடும் என்பதால் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
பொன்சேகாவின் கைது இராணுவ ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை
எதிர்க்கட்சித் தலைவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடப் பட்ட போதும் சரத் பொன்சேகாவின் கைது தொடர்பிலேயே விசேட கவனம் செலுத்தப் பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளமை எவ்வகையிலும் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதொன்றல்ல. இராணுவ ஒழுக்கம் மற்றும் இராணுவ சட்டத்திற் கிணங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி,
தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன் சேகாவுக்குத் தேவையான சகல வசதிகளும் எவ்வித குறைபாடுகளுமின்றி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கைது செய்யப்பட்டமை சம்பந்தமாக நீதிமன்றத்திற்குச் செல்வதற்கும் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
சரத் பொன்சேகா தொடர்பான விசா ரணை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு ள்ளதுடன் அவர் குற்றமிழைத்திருக்காவிட் டால் அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க; தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன் சேகாவிற்கு உணவு எடுத்துச் செல்லும் அவரது மனைவி அனோமா பொன்சேகா வுக்குப் பதிலாக வேறு ஒருவரை அனுமதிக்க முடியுமா என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி; அதனை இராணுவத் தளபதியே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தமது கணவரைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அனோமா பொன்சேகா தொடர்ந்தும் ஊடகங்களினூடாக வேண்டுகோள் விடுத்ததை தாம் பார்த்ததாக ஞாபகப்படுத்திய ஜனாதிபதி; அனோமா பொன்சேகா விரும்பினால் அவரது கையினாலேயே உணவு வழங்குவது மிகவும் பொருத்தமானது எனவும் குறிப் பிட்டுள்ளார்.
அன்று நாம் மக்களுக்காகச் செயற்படப் போய் சிறையிலடைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கர்ப்பிணியாகவிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ காலையிலும் மாலையிலும் தமக்கு உணவு எடுத்துக் கொண்டு தம்மைப் பார்க்க வந்ததை ஜனாதிபதி இங்கு நினைவுகூர்ந்துள்ளார்.
சத்துணவு நஞ்சாகியதில் 10 வயது மாணவி மரணம்
சத்துணவு விஷமாகியதால் பத்து வயது பாடசாலை மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாத்தளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மேலும் 62 மாணவர்கள் மாத்தளை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் ஒரு சிலரின் நிலை கவலை க்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டார ங்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவை உண்டதையடுத்து மாணவர்கள் மயக்கமுற்றதாகவும் சிலர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இறந்துபோன மாணவி மாத்தளை பலாபத்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் பத்து வயதுடைய தனஞ்சனி கமகே என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் பலாபத்வெல புத்தகோஸ தொம்பவெல, கவட்டயாமுனை ஆகிய மூன்று பாடசாலை மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடன்களுக்கான வட்டி வீதம் குறைக்க ப்பட்டதையடுத்து கிராமிய பொருளாதாரம் புத்தூக்கம் பெற்றிருப்பதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தொழில் முயற்சிகளுக்காகப் பெறப்படும் கடனுக்கான வட்டி 12% ஆகக் குறைக்கப்ப ட்டுள்ளது. இதனையடுத்து கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சிகள் புத்தூக்கம் பெற்றுள்ளன. புதிய புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகின்றன. இதனால் கிராமத்தில் சலக மட்டத்திலும் பொருளாதாரத்துக்கான நகர்வுகள் சுறுசுறுப்படைந்துள்ளதென்று கலாநிதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை வங்கி தலைமையக த்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக் கமைய நாட்டின் பொருளாதார த்தில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்துவ தற்கான சகல நடவடிக்கைகளையும் இலங்கை வங்கி மேற்கொண்டு ள்ளது.
புதிய புதிய துறைகளிலும் கால் பதித்து முதலீட்டுச் செயற்பாடுக ளையும் முன்னெடுக்கிது. இதன் மூலம் அரசாங்கத்தின் செயற்றி ட்டங்களுக்குக் கைகொடுப்பதற்கு இலங்கை வங்கி தயாராக உள்ளதென்றும் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புகடன்களுக்கான வட்டி வீதத்தை நான்கு தடவை குறைத்துள்ளோம். நாம் வட்டியில் தங்கியிருப்பதால் கடன்களுக்கான வட்டியைக் குறைத் ததால் தாக்கம் ஏற் பட்டது. எனினும் அதனைச் சமப்படுத்துவ தற்கான ஏனைய நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டோம். கிராமத்தில் பெண்களை வலுவூட்டு வதற்காக ஆயினும் மகளிர் குழுக் களை அமைத்துச் செயற்படுத்துகின் றோம்பூ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் போதைப் பொருளை கடத்திவந்த மூன்று பாகிஸ்தானியர்களை சுங்கத்திணைக்களத்தினர் கைது செய்ததாக சுங்கத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.
ஹரோயின் போதைப்பொருளை உருண்டைகளாக விசேட பாதுகாப்பு உரையில் இட்டு விழுங்கியே ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்தி வந்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான இம்மூவரையும் சுங்கத் திணைக்களத்தினர் ஸ்கேன் செய்தபோதே வயிற்றுக்குள் ஹெரோயின் உருண்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சுமார் 40 க்கும் மேற்பட்ட ஹெரோயின் உருண்டைகள் நேற்று மாலை வரை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் மார்க்
சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்கின்றவர்கள் மீது பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க் தெரிவித்தார்.
ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் கிராமத்திலுள்ள ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க்; இக்கிராமத்தின் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டப்பட்டு காணாமற்போயுள்ளது.
இதையடுத்து இக்கிராமத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பொறுமை கார்த்தது போன்று பொதுமக்கள் தொடர்ந்து பொறுமை காக்க வேண்டும்.
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸார் தம்மாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்றார்.
இதேவேளை, ஆரையம்பதி சிகரம் கிராமத்திலுள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு காணாமற்போன விடயம் தொடர்பாக மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேர்திவத்த தெரிவித்தார்.
கடந்த 10.02.2010 புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரையில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இது விடயத்தில் இன்னும் சில சந்தேகநபர்களை கைது செய்யவேண்டியுள்ள தாகவும் அச்சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
இவ்விபத்தில், இராணுவ வாகனத்தில் வந்த சாரதி உட்பட மூன்று பேர் காயங்களுக்குள்ளாகி, பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, விசேட சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேகமாக வந்து கொண்டிருந்த இராணுவ வாகனத்தின் சில்லுகள் இரண்டு கழன்றதினாலேயே, இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்ட பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தின் போது இராணுவ வாகன சாரதி, வாகன இயந்திரத்திற்குள் சிக்கியதினால் பெரும் தீக்காயங்களுடன், ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டங்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைக்கட்டுப்பாடு மற்றும் உணவுத் தேவைகள், உணவுப் பாதுகாப்பு குறித்து விசேட கூட்டமொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு உட்பட
நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ங்களிலுமுள்ள மாவட்ட செயலா ளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
நிதி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங் களினதும் உணவுத் தேவை மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட் களின் தொகை அத்துடன் உணவுப் பாதுகாப்பு குறித்தும் ஆராயப்பட்டு ள்ளது.
நேற்று முன்தினம் ஆரம்பமான இக்கூட்டம் நேற்றும் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள சனத் தொகைக்கு ஏற்றவாறு உண வைக் கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பாகவும், மேலதிக உணவை பற்றாக்குறை நிலவும் மாவட்ட த்திற்கு பகிர்ந்தளிப்பது குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட் டுள்ளது.

மேலும் 62 மாணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி: மாத்தளை சிங்கள மகா வித். பரிதாபம்
சத்துணவு விஷமாகியதால் பத்து வயது பாடசாலை மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாத்தளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மேலும் 62 மாணவர்கள் மாத்தளை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் ஒரு சிலரின் நிலை கவலை க்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டார ங்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவை உண்டதையடுத்து மாணவர்கள் மயக்கமுற்றதாகவும் சிலர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இறந்துபோன மாணவி மாத்தளை பலாபத்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் பத்து வயதுடைய தனஞ்சனி கமகே என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் பலாபத்வெல புத்தகோஸ தொம்பவெல, கவட்டயாமுனை ஆகிய மூன்று பாடசாலை மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடன் வட்டி வீதம் குறைப்பால் கிராமிய பொருளாதாரத்துக்கு புத்தூக்கம்
இலங்கை வங்கியின் தலைவர்
இலங்கை வங்கியின் தலைவர்
கடன்களுக்கான வட்டி வீதம் குறைக்க ப்பட்டதையடுத்து கிராமிய பொருளாதாரம் புத்தூக்கம் பெற்றிருப்பதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தொழில் முயற்சிகளுக்காகப் பெறப்படும் கடனுக்கான வட்டி 12% ஆகக் குறைக்கப்ப ட்டுள்ளது. இதனையடுத்து கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சிகள் புத்தூக்கம் பெற்றுள்ளன. புதிய புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகின்றன. இதனால் கிராமத்தில் சலக மட்டத்திலும் பொருளாதாரத்துக்கான நகர்வுகள் சுறுசுறுப்படைந்துள்ளதென்று கலாநிதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை வங்கி தலைமையக த்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக் கமைய நாட்டின் பொருளாதார த்தில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்துவ தற்கான சகல நடவடிக்கைகளையும் இலங்கை வங்கி மேற்கொண்டு ள்ளது.
புதிய புதிய துறைகளிலும் கால் பதித்து முதலீட்டுச் செயற்பாடுக ளையும் முன்னெடுக்கிது. இதன் மூலம் அரசாங்கத்தின் செயற்றி ட்டங்களுக்குக் கைகொடுப்பதற்கு இலங்கை வங்கி தயாராக உள்ளதென்றும் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புகடன்களுக்கான வட்டி வீதத்தை நான்கு தடவை குறைத்துள்ளோம். நாம் வட்டியில் தங்கியிருப்பதால் கடன்களுக்கான வட்டியைக் குறைத் ததால் தாக்கம் ஏற் பட்டது. எனினும் அதனைச் சமப்படுத்துவ தற்கான ஏனைய நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டோம். கிராமத்தில் பெண்களை வலுவூட்டு வதற்காக ஆயினும் மகளிர் குழுக் களை அமைத்துச் செயற்படுத்துகின் றோம்பூ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வயிற்றுக்குள் ஹெரோயின் உருண்டைகள்;
மூன்று பாக். பிரஜைகள் மடக்கிப்பிடிப்பு
மூன்று பாக். பிரஜைகள் மடக்கிப்பிடிப்பு
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் போதைப் பொருளை கடத்திவந்த மூன்று பாகிஸ்தானியர்களை சுங்கத்திணைக்களத்தினர் கைது செய்ததாக சுங்கத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.
ஹரோயின் போதைப்பொருளை உருண்டைகளாக விசேட பாதுகாப்பு உரையில் இட்டு விழுங்கியே ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்தி வந்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான இம்மூவரையும் சுங்கத் திணைக்களத்தினர் ஸ்கேன் செய்தபோதே வயிற்றுக்குள் ஹெரோயின் உருண்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சுமார் 40 க்கும் மேற்பட்ட ஹெரோயின் உருண்டைகள் நேற்று மாலை வரை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை
மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் மார்க்
சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்கின்றவர்கள் மீது பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க் தெரிவித்தார்.
ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் கிராமத்திலுள்ள ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க்; இக்கிராமத்தின் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டப்பட்டு காணாமற்போயுள்ளது.
இதையடுத்து இக்கிராமத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பொறுமை கார்த்தது போன்று பொதுமக்கள் தொடர்ந்து பொறுமை காக்க வேண்டும்.
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸார் தம்மாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்றார்.
இதேவேளை, ஆரையம்பதி சிகரம் கிராமத்திலுள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு காணாமற்போன விடயம் தொடர்பாக மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேர்திவத்த தெரிவித்தார்.
கடந்த 10.02.2010 புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரையில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இது விடயத்தில் இன்னும் சில சந்தேகநபர்களை கைது செய்யவேண்டியுள்ள தாகவும் அச்சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
இராணுவ வாகனம் விபத்து சாரதி உட்பட மூவர் காயம்
இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு மதிய உணவினை வழங்கி விட்டு, தியத்தலாவை இராணுவ முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்த இராணுவ வாகனம், ரிதிபான என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.இவ்விபத்தில், இராணுவ வாகனத்தில் வந்த சாரதி உட்பட மூன்று பேர் காயங்களுக்குள்ளாகி, பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, விசேட சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேகமாக வந்து கொண்டிருந்த இராணுவ வாகனத்தின் சில்லுகள் இரண்டு கழன்றதினாலேயே, இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்ட பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தின் போது இராணுவ வாகன சாரதி, வாகன இயந்திரத்திற்குள் சிக்கியதினால் பெரும் தீக்காயங்களுடன், ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத். பொருட்களின் விலைக் கட்டுப்பாடு; தேவைகள்;
மாவட்டங்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைக்கட்டுப்பாடு மற்றும் உணவுத் தேவைகள், உணவுப் பாதுகாப்பு குறித்து விசேட கூட்டமொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு உட்பட
நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ங்களிலுமுள்ள மாவட்ட செயலா ளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
நிதி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங் களினதும் உணவுத் தேவை மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட் களின் தொகை அத்துடன் உணவுப் பாதுகாப்பு குறித்தும் ஆராயப்பட்டு ள்ளது.
நேற்று முன்தினம் ஆரம்பமான இக்கூட்டம் நேற்றும் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள சனத் தொகைக்கு ஏற்றவாறு உண வைக் கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பாகவும், மேலதிக உணவை பற்றாக்குறை நிலவும் மாவட்ட த்திற்கு பகிர்ந்தளிப்பது குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட் டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக