13 பிப்ரவரி, 2010


ஜெனரல் பொன்சேகாவின் உடல் நிலைமைகளை கவனிக்க விசேட வைத்தியர்கள் குழு.




ஜெனரல் பொன்சேகாவின் உடல் நிலைமைகளை கண்காணிக்க விசேட வைத்தியர்கள் குழுவொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

இவ்வைத்தியக் குழு 24 மணி நேரம் விழிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவை ஏற்படின் இராணுவ வைத்தியசாலையில் வைத்திய ஆலோசர் மேஜர் ஜெனரல் எஸ்-எச் முனசிங்கவிற்கு ஜெனரல் பொன்சேகாவோ அவரது மனைவியோ எந்த நேரத்திலும் அழைப்பபை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா நேற்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கதினரை தொடர்பு கொண்டு தனது கணவனுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்குவதில் காணப்படும் குறைபாடுகளை தீர்பதற்கு உதவுமாறு கேட்டிருந்தார்.

ஜெனரல் பொன்சேகா மூன்று தடவைகள் குண்டுத்தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அதன்போது அவரது உடலில் புகுந்துள்ள சில குண்டுத்துகள்கள் இதுவரை நீக்கப்படவில்லை எனவும் , இறுதியா இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குலில் தனது கணவரில் ஈரலுக்கு அண்மித்தபகுதில் 1 அங்குல நீழமான குண்டுத்துகள் ஒன்று இருப்பதாகவும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு அவர் ஒவ்வொரு ஆறுமணி நேரமும் மாத்திரைகள் எடுக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்த அவர், தனது கணவனின் உடல் நிலைமை தொடர்பான முழு விபரமும் இராணுவ வைத்தியசாலையின் இயக்குனருக்கே தெரியும் எனவும் அவரை தொடர்ந்தும் தனது கணவனின் உடல் நலத்தினை கவனிக்க அனுமதிக்குமாறும் வேண்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



25-ந் தேதி நிபந்தனையற்ற பேச்சுக்கு பாகிஸ்தான் சம்மதம்










அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று, பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா சம்மதம் தெரிவித்தது. வருகிற 18 அல்லது 25-ந் தேதியில் இஸ்லாமாபாத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பியது. இதில், 25-ந் தேதியை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டு இருக்கிறது.

இதன் படி இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவும், பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷீரும் கலந்துகொள்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் நிபந்தனையற்றதாக அமையும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் அப்துல் பாசித் தெரிவித்தார்.

வெளிநாட்டு வினோதம்
மனிதர்களை தோற்கடித்த மாடுகள்



உலகின் தென்கோடியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ளது நிïசிலாந்து. இந்த நாட்டில் மனிதர்களை விட மாடுகள் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. 2009-ம் ஆண்டு ஜுன் மாதம் எடுத்த கணக்கெடுப்பில் 58 லட்சம் பசுமாடுகள் இருப்பது தெரியவந்து உள்ளது. அந்த நாட்டு மொத்த மக்கள் தொகை 43 லட்சம் தான்.

மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதற்கு மாட்டு பண்ணைகள் லாபகரமாக இயங்குவது தான் காரணம் ஆகும். அதனால் ஆடு முதலிய மிருகங்களை வளர்த்தவர்கள் அதை கைவிட்டு விட்டு மாடுவளர்க்க தொடங்கி உள்ளனர்.



முகத்தில் தாடி முளைத்த மனைவியை விவாகரத்து செய்த அரேபிய தூதர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தூதர் ஒருவருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. அந்த பெண்ணுக்கு முகத்தில் முடி முளைத்து இருக்கும். மாறுகண் வேறு. இதை அவர் பர்தா மூலம் மறைத்து இருந்தார். திருமணம் நிச்சயமான பிறகு இருவரும் சந்தித்தபோது எல்லாம் அந்த பெண் பர்தா அணிந்து இருந்ததால், அவர் முகத்தில் முடி இருந்ததை கண்டு பிடிக்க முடியவில்லை.

திருமண ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்ட பிறகு அவர் மனைவியின் முகத்தில் முத்தமிட குனிந்தபோது தான் அவர் முகத்தில் தாடி இருப்பதை கவனித்தார். அதோடு மாறுகண் என்பதும் தெரியவந்தது. அதன் பிறகு இருவரும் சந்திக்கும்போது எல்லாம் அந்த பெண் பர்தா மூலம் மறைத்துக்கொண்டு கணவருடன் பழகி வந்தார். தாம்பத்திய உறவின் போது கூட அவர் பர்தாவுடன் இருந்ததால் அவரால் மனைவி முகத்தில் தாடி இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அவர் இஸ்லாமிய கோர்ட்டில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். தன் தாயாரே அந்த பெண்ணின் தங்கை போட்டோவை காட்டி தன்னை ஏமாற்றி விட்டார் என்று குற்றஞ்சாட்டி இருந்தார். நகை மற்றும் புடவை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூ.68 லட்சத்தை திருப்பி தரவேண்டும் எனறும் அதோடு தனக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு விவாகரத்து வழங்கியது. மேலும், பணத்தை திரும்ப தர உத்தரவிடவும் இழப்பீடு தரவும் கோர்ட்டு மறுத்து விட்டது.

***

முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்டதாம் மைக்Úல் ஜாக்சன் ஆவி



பாப் இசை உலகில் உலகப்புகழ் பெற்றவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த ஆண்டு தன் 50 வயதில் மரணம் அடைந்தார். இவர் மனைவி மேரி பிரஸ்லி (வயது 42). இவரை 1994-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 18 மாதங்கள் கழித்து அவர்கள் பிரிந்து விட்டனர்.

பிரஸ்லியும், மைக்கேல் ஜாக்சனின் மேக் அப் கலைஞர் கரேன் பயேகாஸ்சும் ஒரு மீடியம் மூலம் அவரது ஆவியுடன் பேசினார்கள். அப்போது அவர் உனக்கு (பிரஸ்லி) செய்த தவறுக்காக என்னை மன்னித்து விடு என்று ஆவி கேட்டுக்கொண்டதாக கரேன் பயேகாஸ் தெரிவித்தார்.

மீடியமாக செயல்பட்டவருக்கு நாங்கள் யார் என்பதும், எங்களுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் எதுவும் தெரியாது என்று கரேன் பயேகாஸ் தெரிவித்தார்.

அவரது தனி டாக்டர் கொனார்டு முர்ரே பற்றியும் அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டு பற்றியும் கூற மைக்கேல் ஜாக்சன் மறுத்து விட்டார்.


இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
ராணுவ நடவடிக்கை எடுத்தால் உங்களை இல்லாமல் செய்து விடுவோம்



இஸ்ரேல் இந்த பிராந்தியத்தில் ஏதேனும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அதை எதிர்த்து நடவடிக்கை எடுப்போம். அதன்பிறகு இஸ்ரேல் என்ற நாடே இருக்காது என்று ஈரான் நாட்டு அதிபர் மக்மூத் அகமதினிஜாத் எச்சரித்தார்.

ஈரான் அதிபர், சிரியா அதிபர் பாஷர்அல் ஆசாத்திடம் டெலிபோனில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது

2006-முதல் 2009-ம் ஆண்டு கால கட்டங்களில் காசா மக்களிடமும், லெபனான் ஹிஸ்பொல்லா தீவிரவாதிகளிடமும் ஏற்பட்ட தோல்விக்கு எந்த வகையிலும் பழி வாங்கலாம் என்று இஸ்ரேல் ஆலோசித்து வருவதாக நம்பகமான தகவல் எனக்கு கிடைத்து உள்ளது. இஸ்ரேல் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்த்து முழு அளவில் போர் நடத்தப்பட வேண்டும். இந்த போர் மூலம் எதிரியை இல்லாமல் ஒழிக்கவேண்டும்.

இவ்வாறு அகமதினிஜாத் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக