26 ஜனவரி, 2010

எத்தியோப்பிய விமானம் கடலில் வீழ்ந்து விபத்து
85 பயணிகள் பலி
பெய்ரூட் :


85 பயணிகளுடன் சென்ற எதியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து எதியோபியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் நேற்றுக் காலையில் எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு சென்ற 45 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்துக்கும், விமான கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானம் மத்திய தரைகடல் மேல் பறந்த போது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமானத்தில் இருந்தவர்களில் 54 பேர் லெபனானை சேர்ந்தவர்கள், எஞ்சியவர்களில் பெரும்பாலானோர் 22 பேர் எதியோபியாவை சேர்ந்தவர்கள். ஒருவர் ஈராக்கியர், பிரான்ஸ், சிரியா நாட்டை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். இவர்களைத்தவிர விமான பைலட்டு உட்பட சிப்பந்திகள் 7 பேர் மொத்தம் 92 பேர் விமானத்தில் இருந்தனர்.

விமானம் நடுவானில் திடீரென தீ பிடித்து எரிந்து விழுந்ததாக மத்திய தரைக்கடல் பகுதி கடலோர மக்கள் சிலர் தெரி வித்துள்ளனர். விமான விபத்து குறித்து செய்தி அறிந்தவுடன் லெபனான் நாட்டு அதிகாரிகள் ரபீக் ஹரிரி, விமான நிலையம் விரைந்துள்ளார். இங்கு இருந்துதான் அந்த விமானம் புறப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளில் லெபனான் நாட்டின் இராணுவம், கடற்படை மற்றும் ஐ.நா., பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக