26 ஜனவரி, 2010






ஜேவிபி எம்.பி.விஜித்த ஹேரத் கிளிநொச்சியில் தடுத்து வைத்து விசாரணை


No Image

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இராணுவத்தினர் தடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் எமக்குத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஜனாதிபதி வேட்பாளர் சன்ன ஜானக சுகத்சிறி கமகே மற்றும் தேர்தல் முகவர்கள் ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வாக்குச் சாவடிகளைப் பார்வையிடச் சென்ற சமயம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவின் அடிப்படையிலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வாக்குச் சாவடிகளுக்கு முகவர்கள் செல்வதைத் தடுக்கும் முற்சியே இது என மக்கள் விடுதலை முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.



யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை 13 இடங்களில் கைக்குண்டுத் தாக்குதல்


No Image

யாழ் ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளிலும், மானிப்பாய், கோண்டாவில் உட்பட்ட 13 இடங்களில் இன்று அதிகாலை 2.00 மணிமுதல் 4.00 மணி வரையிலான இடைவெளியில் கைக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. மேற்படி சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் எம்.பி தெரிவிக்கையில்,

"30 வருட கால யுத்தத்தின் பின்னர் சுதந்திரமான முறையில் வாக்களிக்க முற்பட்ட யாழ். மக்களின் வாக்களிப்பு உரிமைகளைத் தடுக்கும் முகமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு யாழ். மக்கள் துணை போகக் கூடாது" எனத் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து பஸ் சேவைக்குச் சொந்தமான பஸ்கள் பலவும் சேதத்திற்குள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மக்கள் குழுவினராகச் சென்று வாக்களிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம சந்திரனின் வீட்டின் மீதுதாக்குதல்

No Image
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வீட்டுக்கு நேற்று இரவு இரண்டு வெள்ளை வேன்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

ஆவரங்காலில் உள்ள அவரது சாரதியின் வீடும் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக