பேராயர் பேரருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கையின் இரண்டாவது கருதினாலாக இன்று திருநிலைப்படுத்தப்படவுள்ளார்.
வத்திக்கான புனித பேதுருவான வர் பேராலயத்தில் நடைபெறும் விசேட வைபவத்தின் போது பரிசுத்த பாப்பரசர் 16வது ஆசிர்வாதப்பர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை கருதினாலாக திருநிலைப்படுத்துவார். அந்த நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கடந்த மாதம் கத்தோலிக்கத் திருச் சபையின் புதிய கருதினால்களின் பெயர்களை பரிசுத்த பாப்பரசர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதற்கிணங்க இன்றைய திருநிலைப்படுத்தல் நிகழ்வில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் 24 பேர் கருதினால்களாக பதவியேற்கின்றனர்.
புதிய கருதினால் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முதலாவது திருப்பலி வத்திக்கான பேராலயத்தில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறுவதுடன், 27ம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்புகிறார். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு தேவத்தை பெஸிலிக்காவரை அவர் ஊர்வலமாக அழைத்து வருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனையடுத்து நன்றித் திருப்பலியொன் றையும் அவர் நிறைவேற்றவுள்ளார். அதேவேளை, எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் டி.எம். ஜயரட்ன உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் பங்கேற்கும் வைபவமொன்றும் இடம்பெறவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக