20 நவம்பர், 2010

நிவாரணக் கிராமங்களின் எண்ணிக்கை 2 ஆக குறைப்பு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் இன்று கையளிப்பு

மீளக்குடியேறுவதற்காக முகாம்களில் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் தற்பொழுது ஐந்தாக செயற்படும் முகாம்களை இரண்டாகக் குறைத்துச் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் நேற்று முன்தினம் (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் தெரிவித்தது, இதன்படி வலயம் நான்கிலிருந்த மக்கள் கதிர்காமர் முகாமுடன் இணைக்கப்பட்டுள்ளனர். அதே போன்று வலயம் 2, 3 ஆகிய வற்றில் தங்கியுள்ள மக்கள் வலயம் ஒன்றில் தங்க வைக்கப்படுவார்கள். சுமார் 18 ஆயிரம் பேர் வரை மட்டுமே இன்னமும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர். இதனால் நிர்வாக செயற்பாடுகளின் வசதி கருதி இரண்டு முகாம்களை மட்டும் செயற்படுத்த முடிவு செய்யப்பட்டு ள்ளதாக வவுனியா மாவட்டச் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இதேவேளை, வவுனியா மற்றும் செட்டிக்குளம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 518 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கற்குளம், நேரியகுளம் பகுதிகளில் ஓர் அரச சார்பற்ற நிறுவனம் இந்த வீடுகளை நிர்மாணித்துள்ளதாகவும் விரைவில் பயனாளிகளுக்குப் பொறுப் பளிக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

அதேநேரம், கனகராயன்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 50 வீடுகள் இன்று உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படுமென்றும் மாவட்டச் செயலகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக