20 நவம்பர், 2010

சுபவேளையில் ஜனாதிபதி நேற்று பதவியேற்பு; காலிமுகத்திடல் விழாக்கோலம்; கண்கவர் நிகழ்வுகள்






ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப்பிரமாண வைபவம் நேற்று கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் உள்ள ஜனாதிபதி செயலக முன்றலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

நேற்று மு.ப. 10.16க்கு சுபவேளையில் பிரதம நீதியரசர் அசோக டீ சில்வா முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வைபவத்தையொட்டி காலிமுகத்திடல் களைகட்டியிருந்ததுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முப்படையினரின் அணி வகுப்புடன் ஆரம்பமான இவ் வைபவத்திற்கு சிறப்பதிதிகளாக பிரதமர் டி. எம். ஜயரட்ண, மாலைதீவு ஜனாதிபதி, பூட்டான் பிரதமர், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், ராஜதந்திரிகள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி செயலக முன்றலில் விசேட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததுடன் சூரிய பகவானின் இலாஞ்சனை பொறிக்கப்பட்ட விசேட மேடையில் சத்தியப் பிரமாணம் உத்தியோகபூர்வமாக நடைபெற்றதுடன் ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்தார்.

முப்படைத் தளபதிகள் மற்றும் தமது பாரியார் புதல்வர்கள் சகிதம் இந்நிகழ்வில் ஜனாதிபதி பிரசன்னமாகியிருந்தார்.

உத்தியோகபூர்வ பதவியேற்பு நிகழ்வையடுத்து முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு இடம்பெற்றது. அத்துடன் 21 மரியாதை பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. நிகழ்வில் கலந்துகொண்டோர் தேசியக் கொடிகளை அசைத்து தமது மகிழ்ச்சியையும் வாழ்த்தினையும் தெரிவித்ததுடன் சுற்றுச் சூழலில் பட்டாசு கொளுத்தி பொதுமக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்ப டுத்தினர். அதனைத் தொடர்ந்து கலாசார மத ரீதியான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக