11 ஜூலை, 2010

ஐ.நா. அமைதிப்படை கமாண்டராக இந்திய ராணுவ அதிகாரி நியமனம்



காங்கோ நாட்டுக்கான ஐ.நா. அமைதிப்படை கமாண்டராக இந்திய ராணுவத்தின் லெப்டினென்ட் ஜெனெரல் சந்தர் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான்-கி-மூன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். தற்போது, இந்தியாவுக்கான ஐ.நா. அமைதி நடவடிக்கைக் குழுவின் பொறுப்பாளராக உள்ளார் பிரகாஷ். இந்திய ராணுவத்தில் 1973-ம் ஆண்டு பணியில் சேர்ந்த பிரகாஷ், கடந்த 37 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

ஈரான்-இராக் நாடுகளுக்கான ஐ.நா. ராணுவ கண்காணிப்புக் குழுவில் உயர் அதிகாரியாகவும் பிரகாஷ் பணியாற்றியுள்ளார்.

காங்கோவில் தற்போது 18,884 ராணுவத்தினரும், 1,233 போலீஸக்ஷ்ரும் பணியில் உள்ளனர். இதில் இந்தியா, இலங்கை, வங்க தேசம் மற்றும் நேபாள நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் அடங்குவர்.

இதுவரை காங்கோவில் ஐ.நா. அமைதிப்படை கமாண்டராக செனகல் நாட்டைச் சேர்ந்த பபாகர் கயே பணியாற்றி வந்தார்.

காங்கோவில், சுகாதார மேம்பாடு, பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக