6 ஜூன், 2010

உலகில் முதலீடு செய்வதற்கு இலங்கை பொருத்தமான நாடு உலக வர்த்தக சமூகத்தினர்




உலகில் முதலீடு செய்வதற்கு இலங்கையை மிகவும் பொருத்தமான நாடாகக் கருதுவதாக உலக வர்த்தக சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.

வேகமாக வளரும் பொருளாதாரம் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள பாதுகாப்பான சூழல் காரணமாக உலக வர்த்தகர்கள் மேலும் மேலும் இலங்கையின் பால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

‘ஐஃபா’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற உலக வர்த்தகர்களுக்கிடையிலான சந்திப்பொன்றிலேயே அவர்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு, நாட்டின் தற்போதைய சூழல் நிலை தொடர்பாக உலக வர்த்தக சமூகத்தினருக்கு எடுத்து ரைத்தார். இலங்கையில் முத லீடுகளைச் செய்வதற்கு உட்கட்டமைப்பு வசதிகள், விவசாயத்துறை, கைத்தொழில்துறை உள்ளி ட்ட பல்வேறு துறைகள் காணப்படுவதாக உலக வர்த்தக சமூகத்தினருக்கு ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

உலகப் பொருளாதார வீழ்ச்சி, உணவுத் தட்டுப்பாடு இவை அனைத் தையும் எதிர் கொண்டு புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொண்டு எழுந்து நிற்க முடிந்துள்ள தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக