22 ஜூன், 2010

தீவிரவாதிகளுக்கு ஆலோசனை; பேச்சு சுதந்திரத்தைப் பாதிக்கும் : அமெரிக்கா

பயங்கரவாத குழுக்களுக்கு தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ, ஆலோசனை வழங்குவது பேச்சு சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என அமெரிக்க உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாபதி ஒபாமாவின் அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதக் குழுக்களுக்கு உபகரண உதவி, பயிற்சிகள், சேவைகள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் உதவி என்பன வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள், துருக்கியின் குர்திஸ் ஆகிய அமைப்புகளுக்குச் சமாதான நடவடிக்கைகளுக்காக ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்குவது தொடர்பில், இரண்டு அமெரிக்கர்களும் 6 அமெரிக்க அமைப்புகளும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 12 வருடங்களாக நீடித்து வந்த சட்டச் சிக்கல் நிலை தொடர்பிலேயே அமெரிக்காவின் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

அமெரிக்கத் தலைமை நீதியரசர் ஜோன் ரொபர்ட், இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் போது, தமிழீழ விடுதலைப்புலிகளும் குர்திஸ் அமைப்பும் அவர்களின் நாட்டில் சுதந்திரத்தை எதிர்ப்பார்க்கும் அமைப்புக்களாகும் எனத் தெரிவித்தார்.



இரண்டு குழுக்களும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை காரணமாகவே இந்த பிரகடனம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக