22 ஜூன், 2010

அமைச்சர் டக்ளஸுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு



அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக சென்னை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியா சென்றார். அப்போது சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணி புகழேந்தி மேல் நீதிமன்றில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு மனுவில், "தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா இலங்கை மந்திரியாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரைக் கைது செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கை சென்னை மேல் நீதிமன்றம் விசாரித்து, மத்திய அரசு இதற்குப் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. சென்னை பொலிஸ் தரப்பில் மத்திய அரசின் பதிலுக்குக் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி இதில் பதில் அளிக்க 2 வார காலம் அவகாசம் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக