2 ஜூன், 2010

நடிகர் அமிதாப்பச்சன் கலந்துகொள்ள மாட்டார்

பல வாரங்களாக நிலவிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல பொலிவூட் சூப்பர் ஸ்டாரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய கதாநாயகனுமான அமிதாப் பச்சன் கொழும்பில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவித்துள்ளக்ஷிர் என இந்திய என்.டி.ரி.வி. தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

பச்சனை இலக்கு வைத்து அவரது மும்பாய் இல்லத்திற்கு வெளியே கடந்த மாதம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் குழுக்கள், கொழும்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டாமென அவரிடம் கேட்டுக் கொண்டன. இதனையடுத்து, நாம் அனைவரது உணர்வுகளையும் மதித்து நடப்பதாக பச்சன் தெரிவித்திருந்தார். இலங்கை 30 வருடகால சிவில் யுத்தத்திலிருந்து மீண்டு நிம்மதிப் பெருமூச்சு விடுவதை சித்திரிக்குமென கருதப்பட்ட 2010ஆம் வருட இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவதற்கென தெரிவு செய்யப்பட்ட இடம் குறித்து தென்னிந்திய குழுக்கள் சில அதிருப்தி தெரிவித்ததை அடுத்து விழா கேள்விக்குரிய விடயமாக மாறிவருகிறது. தமிழ் திரைப்பட உலகின் பிரபலஸ்தர்களான ரஜினிகாந்த், கமலஹாஸன், விஜய், அஜித், சூர்யா ஆகியோர் இந்திய திரைப்பட விழாவில் எவ்வகையிலும் சம்பந்தப்பட மறுப்பு தெரிவித்த தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் விழா நடத்தப்படுவது குறித்து அதிருப்தி கொண்டனர்.

அநேகமான நட்சத்திரங்கள் ஏற்கனவே விழாவில் கலந்துகொள்ள முடியாமை பற்றி அறிவித்துவிட்டனர். ஷாருக்கான், அர்ஜுன் ரம்பால் விழா ஏற்பாட்டாளர்களுக்கு நழுவல் பதில்களை அளித்து வந்தனர். இந்திய, இலங்கை கிரிக்கட் மற்றும் திரை நட்சத்திரங்கள் பங்கு பற்றும் தருமசாதன நிதிக்கென ஒழுங்கு செய்யப்பட்ட கிரிக்கட் போட்டியில் கலந்துகொள்ளும் பொலிவூட் அணியின் தலைவராக விளையாட இருந்த ஷாருக்கானுக்கு பதிலாக தற்போது ஹிர்திக் விளையாட இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோரும் வேறுபணிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறி விழாவை தவிர்த்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக