வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான தீர்வை வரியை இலங்கை 50 சதவீதத்தினால் குறைத்துள்ளது.
அத்துடன், நாட்டின் பொருளாதாரம் விருத்தியடைந்ததையும் வாகனங்களுக்கான கிராக்கி அதிகரித்ததையும் அடுத்து அரசாங்கம் சகல பொருட்களினதும் இறக்குமதியில் விதிக்கப்பட்டு வந்த 15 சதவீத மேலதிக வரியை நீக்கியுள்ளதுடன் இலத்திரனியல் பொருட்கள் மீதான தீர்வையையும் குறைத்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வரிக்குறைப்பின்படி, உதாரணமாக, அதன் பெறுமதியில் சுமார் 183 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுவந்த இந்திய தயாரிப்பான மாருதி கார் ஒன்றுக்கு தற்போது 90 சதவீத வரி மட்டுமே அறவிடப்படும் என்று இலங்கையின் நிதிக் கொள்கை பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆர். அட்டிகல தெரிவித்தார்.
கடந்த வருடம் உயர் வரிகளுக்கு மத்தியிலும் கார் இறக்குமதிகள் அதிகரித்த நிலையில,“ தற்போது கார் இறக்குமதியால் மேலும் கூடுதல் வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததோடு வாகனங்களுக்கான கிராக்கியும் சுற்றலா வருமானமும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக அட்டிகல தெரிவித்தார்.
ஏற்கெனவே, சில்லறை வியாபாரத்தை ஊக்குவிப்பதற்காக விசேடமாக வெளிநாட்டவர்களை கவர்வதற்காக கைக்கடிகாரங்கள், கமெராக்கள் ஆகியன மீதான இறக்குமதி வரிகள் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக