27 டிசம்பர், 2009

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கையை உலகின் அதி சிறந்த நாடாக மாற்றுவேன்
மினுவாங்கொடையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ





பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங் கையை உலகின் அதிசிறந்த நாடாக்குவதே தமது ஒரே நோக்கம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (27) மினுவாங்கொடை நகர சபை கூட்டத்தில் கூடியிருந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றிய போது கூறினார்.
தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

தெளிவான மற்றும் உறுதியான நோக்கத்தை கொண்டுள்ள தம்மீது சேறு பூசும் பிரசாரங்களை செய்ய எந்த நியாயமும் இல்லை.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுவரும் பிரசாரக் கூட்டத்தொடரில் இது இரண்டாவது கூட்டமாகும்.

ஜனாதிபதி தேர்தலை அரசியல் சேறு பூசும் நடவடிக்கையாகவே எதிர்க்கட்சியினர் மாற்றியுள்ளனர். அவர்கள் அரசியல் தரிசனம்இ கொள்கைஇ பொருளாதார அல்லது அபிவிருத்தி நோக்கு ஆகிய வற்றைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசுவதில்லை.

மஹிந்த சிந்தனையில் 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ள தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவில்லை என்பதைப்பற்றி மட்டுமே பேசுகின்றனர்.

ஆனால் மஹிந்த சிந்தனையை நிறைவேற்ற மக்கள் ஆணை வழங்கிய ஆறு வருடங்களில் இன்னும் இரண்டு வருடங்கள் மிகுதியாக உள்ளதை அவர்கள் மறந்துவிடக்கூடாது என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள மக்கள் முன் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

இதனை செய்வதற்கு எதிர்க்கட்சியினர் தனக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மட்டுமன்றி பாராளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் தமக்கு பெற்றுத்தருவார்கள் என்று நம்புவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நாற்பது வருட கால அரசியல் அனுபவம் உள்ள நாம் நாற்பது நாட்கள் அனுபவத்தை மட்டுமே பெற்றுள்ள அறியாக் குழந்தையுடன் போட்டியிட வேண்டியுள்ளது. எனினும் அரசியல் அனுபவத்தின் இடைவெளிக்கு சமமான அதிகப்படி வாக்குகளால் தான் வெற்றி பெறப்போவதாகவும் கூறினார்.

எதிர்க்கட்சியினரின் அரசியல் நோக்கம் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான பழி வாங்கும் நோக்கமே யாகும்.

ஆனால் பொய்க்கு ஆயுள்குறைவுஇ இன்று இங்கு கூடியிருக்கும் இல ட்சக்கணக்கான மக்கள் பொய்க்கும் சேறு பூசுவதற்கும் குறைந்த ஆயுளே உள்ளது என்பதை நிரூபித்துக்காட் டப் போகிறார்கள் என்று குறிப்பிட் டார்.

இக் கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச பேசும்போதுஇ

ஊழலையும் விரயத்தையும் ஒழிக்கப்போவதாக கூறும் பொன்சேகா யுத்தம் முடிவுற்றபோது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியாமலே ஆயுதங்களை கொண்டு வருவதற்கு முயற்சித்ததாக கூறினார்.

அந்த ஆயுதக் கப்பலை கொண்டுவந்தவர் சரத் பொன்சேகா. ஆனால் அதனை கோதாபய ராஜபக்ஷவின் பேரில் போடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசிய கட்சியும் சேநு பூசும் பிரசாரங்களை மேற்கொள்வதாக அவர் மேலும் கூறினார்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேனஇ தினேஷ் குணவர்தனஇ பாட்டலி சம்பிக்க ரணவகஇ மேர்வின் சில்வா ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.



புலிகளுடன் உடன்படிக்கை செய்து முஸ்லிம்களை ஏமாற்றியவர் ஹக்கீம்
முஸ்லிம்கள் அவரை ஆதரிக்கக் கூடாது - பசில்


அனைத்து அரசாங்கங்களிலும் அமைச்சராக விருந்து பிரபாகரனு டன் உண்டு குடித்து உறவாடி சமாதானப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்ட ரவூப் ஹக்கீமிற்கு வட க்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற முடியாமற் போனதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

புத்தளம் ஆலங்குடாவில் நேற்று நடைபெற்ற அ. இ.மு.கா. கட்சியின் மாநாட்டில் சிறப்பதிதி யாகக் கலந்துகொண்டு உரையாற் றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றிய மு. கா. தலைவருக்கு ஒருபோதும் முஸ்லிம்கள் ஆதரவளிக்க கூடாது. உங்கள் எதிர்காலத்தை சபீட்சமயமாக்க நடவடிக்கை களை மேற் கொள்ளும் ஜனாதிபதிக்கு உங்கள் பூரண ஆதரவினை வழங்குங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக