23 டிசம்பர், 2009

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடப் போவதில்லையென ஐரோப்பிய ஒன்றியம் தகவல்-


எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தவார இறுதிக்குள் முடிவு செய்யவுள்ளது! // தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கவில்லை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பேர்ணாட் சவேஜ் தெரிவித்துள்ளார். நிதியொதுக்கீடு மற்றும் நேரப்பிரச்சினை காரணமாக ஜனாதிபதித் தேர்தலின்போது கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமது கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த முடியுமென்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட இரு வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் இணங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

ஜனவரி 26ல் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் மாதிரி தேர்தல் திணைக்களத்தால் வெளியீடு-


இடம்பெயர்ந்த மக்களுக்கும் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கும் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை! // தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானம்!

ஜனவரிமாதம் 26ம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் மாதிரியை தேர்தல்கள் செயலகம் வெளியிட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் சிங்கள மொழிமூல வரிசையின் பிரகாரமே இம்முறை அச்சடிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் 22ம் இடத்திலும் எதிரணியின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகாவின் பெயர் 9ம் இடத்திலும் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் 22பேர் போட்டியிடுவதனால் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு, வரலாற்றிலேயே மிகவும் நீளமானதாக அமைந்துள்ளது இவ்வாக்குச்சீட்டு 56 சென்ரிமீற்றர் நீளத்திலேயே இம்முறை அச்சடிக்கப்படவுள்ளது என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

சம்பள நிலுவைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-இலங்கை ஆசிரியர் சங்கம்-




அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனினும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் சம்பள நிலுவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எதிர்வரும் ஜனவரி மாத சம்பளத்துடன் நிலுவையை வழங்கவுள்ளதாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக