23 டிசம்பர், 2009

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்க சட்டமா அதிபர் இணக்கம்-மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

No Image


கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலõளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்க ஆட்சேபனை எதுவுமில்லை என்று சட்டமா அதிபர்இ மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து திஸ்ஸநாயகம் மேன்முறை யீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ததை அடுத்துஇ தம்மைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜே.எஸ். திஸ்ஸநாயகம் 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதிக்கும்இ 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதிக்கும் இடையே இன நல்லுறøவச் சீர்குலைக்கும் வகையில் வட. கிழக்கு மாதாந்த சஞ்சிகையை எழுதிஇ அச்சிட்டு விநியோகித்தார் என்றும்இ இது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரிய குற்றமாகும் என்றும் அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தி தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்..

மேற்படி சஞ்சிகையை நடத்துவதற்கு நிதி சேகரித்தமைஇ இதன் மூலம் பயங்கரவாத்தை ஊக்குவித்தமை போன்ற அவசரகாலப் பிரமாணங்களின் கீழ்இ தண்டனைக்குரிய குற்றச்செயல்களைப் புரிந்த குற்றவாளியாகவும் அவர் இனம் காணப்பட்டார். 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட தமது நண்பர் யசிகரனையும் அவரது மனைவியையும் பார்ப்பதற்காக மறுதினம் திஸ்ஸநாயகம் பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்குச் சென்றபோது கைதுசெய்யப்பட்டார்




அவுஸ்திரேலிய அகதி அந்தஸ்து கோருவோரில் புலி உறுப்பினர்களும் உள்ளனர்:இலங்கை


No Image


அவுஸ்திரேலியாவிற்கு அகதி அந்தஸ்து கோரி சட்டவிரோதமாகச் சென்ற இலங்கையர்களுள் 3 விடுதலை புலி உறுப்பினர்களும் அடங்குவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷிய துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள் அவுஸ்திரேலிய அகதி அந்தஸ்து கோரும் ஏனைய 255 பேரினது அகத் அந்தஸ்து கோரிக்கையிலும் இது பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெகார்த்தாவிலுள்ள இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் இவர்களை அடையாளம் கண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதுவர் சேனக வல்கம்பாய 'த அவுஸ்திரேலியன்' இற்கு தெரிவித்துள்ளார்.விடுதலை புலிகள் தொடர்பாக கிடைத்த புகைப்படங்களின் அடைப்படையில் இவ் முன்னாள் போராளிகள் இனங்காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள இவ்வறிப்பை அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மறுத்துள்ளதுடன்இ அவுஸ்திரேலியா விடுதலை புலிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் 'த அவுஸ்திரேலியன்' இற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் மாதிரியை தேர்தல்கள் செயலகம் வெளியிட்டுள்ளது.

No Image

வேட்பாளர்களின் பெயர்கள் சிங்கள மொழிமூல வரிசையின் பிரகாரமே இம்முறை அச்சடிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் 22 ஆம் இடத்திலும் எதிரணியின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகாவின் பெயர் 9 ஆம் இடத்திலும் இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் 22 பேர் போட்டியிடுவதனால் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுஇ வரலாற்றிலேயே மிகவும் நீளமானதாக அமைந்துள்ளது இவ் வாக்குச்சீட்டு 56 சென்ரிமீற்றர் நீளத்திலேயே இம்முறை அச்சடிக்கப்படவுள்ளது என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக