23 டிசம்பர், 2009

ஐ.நா விளக்கம் கோரிய விவகாரம்:
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய முக்கியத்துவமான பிரச்சினை





‘சண்டே

லீடர்’ பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக்

கொண்டு ஐ.நா. விளக்கம் கோரியிருப்பதை நாட்டுப் பிரச்சினையாக அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வே

ண்டுமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.

‘இதனையொரு அரசியல் பிரச்சினையாகப் பார்க்காமல் தேசியப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று மாலை விசேட செய்தியாளர் மாநாடு நடந்தது. பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாஇ ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கணேகல ஆகியோர் கலந்துகொண்டனர்.

‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு பொன்சேகா வழங்கிய பேட்டி தொடர்பாக ஐ.நா. விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கிய அவர் மேலும் கூறியதாவது;

ஐ.நா. சபை டிசம்பர் 18ம் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றை எழுதியுள்ளது. மே 17ம் திகதி யுத்தம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில்இ வெள்ளைக்கொடியுடன் வந்த புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்இ இதில் மூன்று புலி முக்கியஸ் தர்களின் பெயர்களினதும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அவ்வாறான சம்பவங்கள் நடந்திருந்தால் பூரண விளக்கம் தருமாறு ஐ.நா. கோரியுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

‘இவ்வாறான சம்பவமொன்று நடக்காத நிலையில் விளக்கமளிக்குமாறு ஐ.நா. கேட்டிருக்கிறது. இதனை எந்த வகையிலும் ஏற்க முடியாது’ என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக தனிநபர் எவரையும் நான் குறை கூறவில்லையெனத் தெரிவித்த பிரதமர்இ முன்னாள் அதிகாரியான பொன்சேகாஇ சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங் கிய பேட்டியை அடிப் படையாகக் கொண்டே இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றார்.

“யார் இதனைக் கூறியிருந்தாலும் ஒரு தனிநபர் பிரச்சினையாக இதனைக் கருத முடியாது. நாடு என்ற ரீதியிலேயே நாம் இதனை எதிர்கொள்ள வேண்டி யிருக்கிறது. நடக்காத ஒரு பிரச்சினைக்கு நாம் எந்த வகையில் விளக்கம் கொடுக்க முடியுமெனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார். “சர்வதேச அழுத்தங்கள்” வந்த வண்ணமே இருக்கின்றன. அவை ஒவ்வொரு வடிவத்தில் வருகின்றன.

இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று பட்டுச் செயற்பட வேண்டும். நாடு என்ற ரீதியில் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.


இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டைஅரசாங்கம் முற்றாக நிராகரிப்பு

ஐ. நா. அதிகாரிகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார்


எந்தவொரு இராணுவ அதிகாரியையும் யுத்தக் குற்றச்செயல் விசாரணைகளுக்;கு ஆஜர்ப்படுத்தப் போவதில்லை -அரசாங்கம் தெரிவிப்பு! // ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயம் தீக்கரை!

இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரிப்ப துடன் சரத் பொன்சேகாவின் கூற்றை அடிப்படையாகக் கொண்ட ஐ. நா. சபையின் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் செயற்படவுள்ளதாகவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இது விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது நேரடி அவதானத்தைச் செலுத்தியுள்ளதுடன் ஐ. நா. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளாரெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்இ பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரும் கலந்து கொண்ட இம் மாநாட்டில் அமைச்சர் டளஸ் அழகப் பெரும மேலும் தெரிவித்ததாவது:-

இவ்விவகாரத்தை எவரும் தேர்தலோடு சம்பந்தப்படுத்தக் கூடாது. இது தாய் நாட்டையும் தாய் நாட்டை மீட்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத்தினரையும் களங்கப்படுத் தும் விடயமாகும். பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு முழு உலகத்தின் பாராட்டுக்கும் உரித்தான எமது படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள இக் குற்றச்சாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் தமிழ்இ சிங்களம்இ முஸ்லிம் என்றில்லாமல் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.

இது சரத் பொன்சேகா வெற்றி பெறுவதற்கான போராட்டமல்லஇ படையினரையும் நாட்டையும் அபகீர்த்திக்குள்ளாக்கவே பொன்சேகா ஜனாதி பதி வேட்பாளராக வந்துள்ளார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். (ஸ)

தமிழ்க் கைதிகளின் விடுதலை; முக்கிய அறிவிப்பு அடுத்தவாரம்

ஒரே தடவையில் தீர்க்கும் நடவடிக்கை










வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானகரமான முடிவொன்று எட்டப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இது தொடர்பில் நேற்றைய தினம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையா டலின் பெறுபேறாக கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது.

தமிழ்க் கைதிகளின் விடுதலைக்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி யின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிடம்இ மலையகத் தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் ஹட்டனில் வைத்து வேண்டுகோள் விடுத்திருந்தன. இந்தப் பின்னணியில்இ நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நீதிஇ சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

அனைத்துக் கைதிகளின் பிரச்சினைக ளையும் ஒரே தடவையில் தீர்த்துவைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் கூறினார். வழக்குகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டனர்.

அதேநேரம்இ தமது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர்களை அனுப்பிவைத்திருந்தனர். இதன் விளைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமையஇ கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிசட்ட மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இதற்கிணங்கஇ கைதிகள் கோவைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவென பத்துச் சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்படி வழக்குத் தொடர்வதற்கு அவசியமில்லாதவர்களை விடுதலை செய்யவும் ஏனையவர்களுக்கு வழக்குத் தொடரவும் ஒழுங்குகள் மேற்கொள்ள ப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும்இ தற்போது அனைத்துக் கைதிகள் தொடர்பிலும் ஒரே தடவையில் நடவடிக்கை எடுப்பது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாகவே நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் அடுத்தவாரமளவில் கைதிகளின் விடுதலை குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாகவு ள்ளது. வழக்குகள் எதுவுமின்றி பல்வேறு சிறைகளில் சுமார் 600 தமிழ்க் கைதிகள் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்ப ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக