1 நவம்பர், 2009

வவுனியா பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புக்கள்



இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வவுனியா பிரதேசத்திற்குப் பெருமளவானோர் வந்துள்ளதையடுத்து, பாடசாலைகளில் அனுமதி கோரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் தெரி்வித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,“அரசாங்கத்தின் துரித மீள்குடியேற்ற நடவடிக்கையையடுத்து இடைத்தங்கல் முகாம்களில் இருந்து பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் வவுனியா பிரதேசத்திற்கு வந்துள்ளன. இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வவுனியா நகர்ப்புறப் பாடசாலைகள் உட்பட வவுனியா தெற்கு வலயப் பாடசாலைகளில் அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றார்கள்.

இவ்வாறு விண்ணப்பம் செய்த 3500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வவுனியா தெற்கு வலயப் பாடசாலைகளில் இதுவரையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், பெருமளவான பாடசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைச் சமாளிப்பதற்காக 7 பாடசாலைகளில் மாலை நேர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் இவ்வாறு வந்துள்ளார்கள். அவர்களையும் இந்தப் பாடசாலைகளில் இணைத்து, மாலை நேர வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான மாலை நேர வகுப்புக்களுக்கு அந்தந்த பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்களே பொறுப்பாக இருந்து கடமையாற்றி வருகின்றார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக