1 நவம்பர், 2009

சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் தீவு முகாமை விஸ்தரிக்க தீர்மானம்-

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழையும் நபர்களை தடுத்து வைப்பதற்காக பயன்படுத்தப்படும் கிறிஸ்துமஸ்தீவு தடுப்புமுகாமை விஸ்தரிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது காணப்படும் தடுப்புமுகாமின் அளவை இரட்டிப்பாக விஸ்தரிப்பதற்கு அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின்ரூட் தீர்மானித்துள்ளார். அண்மைக் காலமாக அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்போரின் தொகை அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள்மூலம் பிரவேசிக்க முயற்சிக்கின்றனர். சுமார் 2,300பேருக்கு அடைக்கலம் வழங்கக்கூடிய வகையில் கிறிஸ்துமஸ்தீவு முகாம் விஸ்தரிக்கப்படவுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலியக் கப்பலில் அடைக்கலம் புகுந்துள்ள 78இலங்கையர்களையும் இதுவரையில் இந்தோனேசியா ஏற்காத நிலையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக