1 நவம்பர், 2009

சீருடை அணிந்த எவரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதென இராணுவத் தளபதி தெரிவிப்பு-

தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சீருடை அணிந்த எந்தவொரு இராணுவ அதிகாரிக்கோ அலலது படைவீரருக்கோ உரிமையில்லை என்று இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். அதனையும் மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேவேளை அவர்கள் இராணுவ சேவையிலிருந்து நீக்கப்படுவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புலிகளைத் தோற்கடித்து இராணுவ ரீதியிலான வெற்றியை நிலைநாட்டுவதற்கு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோர் பெரும் பாடுபட்டனர். இராணுவம் என்ற வகையில் நாம் அரசுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது முக்கிய கடமைகளில் ஒன்றாகும். எந்தவொரு அரசும் ஆட்சிக்காலம் முடிந்ததும் தேர்தலை நடத்தும். அவ்வாறானதொரு நிலையில் இராணுவ சீருடை அணிந்த எந்தவொரு நபரும் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது. அவ்வாறு நடைபெறுமாயின் அவர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லெப்.ஜெனரல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக