7 அக்டோபர், 2009

யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றம் துரிதகதியில் இடம்பெறுவதாக அரசஅதிபர் தெரிவிப்பு-அனைத்து கட்சி குழுவொன்றை இலங்கைக்கு
அனுப்ப இந்திய தீர்மானம்

யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாக யாழ். அரசஅதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்றம் மூன்று வகையாக இருக்கின்றது. 1வது யாழ். மாவட்டத்திலிருந்து கிராமங்களில் தங்கியிருந்த மக்கள், 2வது யாழ். மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள், 3வது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டு மீள்குடியேற்றப்படும் மக்கள் ஆவர். இதன்படி தொகையாக பார்க்கும்போது கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் 433குடும்பங்களைச் சேர்ந்த 1550பேராவர். இவர்கள் மணல்காடு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். அதுபோல் யாழ். நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் 1345பேர் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மீள்குடியேற்றப்படவுள்ளனர். வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட 1632குடும்பங்களைச் சேர்ந்த 5152பேர் நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வேலணை, காரைநகர் ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சி குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்போர் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிடும் பொருட்டே இந்தக்குழு இலங்கை வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு கட்சிகளும் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு நாடாளுமன்றக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்கவேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்றை அனுப்பிவைக்கும் தீர்மானத்தை இந்திய மத்திய அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அனைத்துக்கட்சிக் குழு இம்மாத இறுதியளவில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரவிpக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக