7 அக்டோபர், 2009

இடம்பெயர்ந்தோரை பருவப்பெயர்ச்சி மழைக்கு முன் வேறு இடங்களிற்கு மாற்ற வேண்டும்-ஐ.நா



பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெயர்ந்தோரை வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியா மெனிக்பாம் முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரை வேறும் இடங்களில் தங்க வைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும், முகாம் வாழ் மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் வடிகாலமைப்பு முறையின் காரணமாக முகாம்களில் வெள்ள அபாயம் ஏற்படக் கூடிய வாய்ப்பு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இடம்பெயர் மக்களை வேறு இடங்களில் தங்க வைக்கும் செயன்முறையின் போது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தினயும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களிற்கான பொறுப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
புத்தளத்தில் ஹோட்டலொன்றில் வாள் வெட்டு சம்பவம்;ஒருவர் காயம்



புத்தளம் நிவ்செட்ல்மென்ட் வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் ஒருவர் வாள்வெட்டு காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிக்கப் ரக வாகனமொன்றில் வந்த சிலர் வாள்களுடன் கடைக்குள் புகுந்து கடுமையாக கடையில் இருந்த கடை உரிமையாளரின் மகனை இரும்பு தடிகளால் தாக்கியதையடுத்து,இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளளது.

இது குறித்து புத்தளம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இத் தாக்குதல் சம்பவத்தினால் ஹோட்டலிலுள்ள பொருட்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் புத்தளம் பெலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக