21 டிசம்பர், 2009

சர்வதேச விண்வெளி மையத்துக்கு 3 வீரர்களுடன் பறந்த ரஷிய ராக்கெட்


அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஜெர்மனி உள் ளிட்ட நாடுகள் இணைந்து விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை கட்டி வருகின்றனர். இதற்கு தேவையான பொருட்கள் ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படுகிறது?

இந்நிலையில் ரஷியாவின் சோயுஷ் டி.எம்.ஏ-17 என்ற விண்வெளி ஓடம் ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு கஜகஸ்தானில் உள்ள பைகோனுர் காஸ் மோட்ரோம் விண்வெளி தளத்தில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது.

இதில், ரஷியாவின் ஒலெக் கோதோவ், அமெரிக்கா நாசாலின் டிமோதி கீமர் மற்றும் ஜப்பானின் சோய்சி நொகுசிர் ஆகிய விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர்.

திட்டமிட்டபடி சோயுஷ் டி.எம்.ஏ. -17 விண்வெளி ஓடத்துடன் கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ் மோட்ரோம் தளத்தில் இருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது.

விண்வெளியை அடைந் ததும் சோயுஷ் டி.என்.ஏ.-17 விண்வெளி ஓடம் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக பறந்தது. இதை தொடர்ந்து விஞ்ஞானிகள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

வருகிற 23-ந் தேதி இந்த 3 வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைகின்றனர். அங்கு ஏற்கனவே தங்கி யிருக்கும் அமெரிக்க வீரர் ஜெப்வில்லியம்ஸ், ரஷிய வீரர் மாசிம்சரேவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார்கள்.
அவர்களில் வில்லியம்ஸ், சரேவ் ஆகியோர் வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார்கள். தற்போது சென்றுள்ள 3 வீரர்கள் 126 நாட்கள் அங்கு தங்கியிருந்து விட்டு மே மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று ரஷிய விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக