வெளிநாட்டு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட புலிகளின் பாரிய கப்பல் கொழும்பு துறைமுகத்தில்
தேசிய புலனாய்வு துறையினரின் தகவலுக்கமைய வெளிநாட்டு கடற் பரப்பில் இலங்கை கடற்படையின ரால் கைப்பற்றப்பட்ட புலிகளுக்குச் சொந்தமான ‘பிரின்ஸஸ் கிரிஸான்டா’ என்ற பாரிய கப்பல் நேற்று கொழு ம்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப் பட்டது. கடற்படை கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினரால் கொழு ம்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப் பட்ட இந்தக் கப்பலை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க தலைமையிலான உயர் அதிகாரிகள் பொறுப்பேற்றுக் கொண் டனர். ஆயிரக் கணக்கான கடல் மைல் களுக்கு அப்பால் கைப்பற்றப்பட்ட இந்தக் கப்பல் மனிதாபிமான நட வடிக்கையின் இறுதிக் கட்டத் தின் போது பிரபாகரன் உட்பட புலிக ளின் முக்கிய ஸ்தர்கள் பலர் தப்பிச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்து ள்ளதாக கடற்படைத் தளபதி தெரி வித்தார். எல்.ரி.ரி.ஈ. இயக்கத்திற்கு வெளிநாடு களிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆயுத ங்களை கடத்துவதற்கும் பயன்படுத் தப்பட்ட இந்தக் கப்பல் இலகுரக விமானம் இறங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. 90 மீட்டர் நீளமும் 33 மீட்டர் உயரமும் கொண்ட இந்தக் கப்ப லில் 5000 மெற்றிக் தொன் எடை யுள்ள பொருட்கள் கொண்டுசெல்ல முடியும். புலிகளிடமிருந்த பல கப்பல்கள், கடற்படையினரால் முற்றாக தாக்கி யழிக்கப்பட்டன. புலிகளிடமிருந்த மிகப் பெரிய கப்பல் இது என்று கடற்படைத் தளபதி சுட்டிக் காட்டி னார். கொழும்பு துறைமுகத்திற்கு அண் மித்த ஆழ்கடலில் தரித்து நின்ற கப் பலை பார்வையிடுவதற்கென கொழு ம்பு துறைகத்திலிருந்து இரண்டு டோராக்களில் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் கொழும்பு துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிடப்பட்ட பின்னர் கடற்படைத் தளபதி தலைமையில் ஊடகவியலாளர் குழுவினர் கப் பலை சென்று பார்வையிட்டனர். வெற்றிகரமாக கப்பலை துறைமு கத்திற்கு கொண்டு வந்ததை பாராட் டும் வகையில் கப்டன் தஸநாயக்க விடம் கடற்படைத் தளபதி நற் சான்று பத்திரத்தை சமர்ப்பித்தார். இந்தக் கப்பல் ஆயுதக் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயற்பாடுக ளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளமை புலனாய்வு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் தலைமைத்துவத்தின் மூலமும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தா பய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் மூலம் கடற்படையினர் வெற்றிகர மாக தமது நடவடிக்கைகளை முன் னெடுக்க முடிந்ததுடன் புலிகளின் கப்பல்களை இதுபோன்று கொழும் புக்கு கொண்டுவரவும் முடிந்தது என்று கடற்படைத் தளபதி குறிப்பிட்டார். இலங்கை கடற்படையினரின் பாவ னைக்கு இந்த கப்பல் பயன்படுத்தப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கோருகிறது ஐ.நா
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த 13ஆம் திகதி ‘சன்டே லீடர்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கை களை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித் துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நீதி விசார ணைக்குப் புறம்பான உடனடி மற்றும் விசாரணையின்றி மேற்கொள்ளப்படும் மரண தண்டனை விவகாரங்களுக்கு பொறு ப்பான விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்டன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிடமொன்றை அனுப்பி யுள்ளார். சரணடைந்தவர்களை சுடுமாறு இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிக்கு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்குமாறு அக்கடிதத்தில் அவர் கேட்டிருக்கிறார். பாலசிங்கம் நடேசன், சீவரட்னம் புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூன்று புலி இயக்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2009 மே 17 ம் 18ஆம் திகதி இரவு மரணமுற்ற சூழ்நிலை தொடர்பாகவே ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்கிறது. தனக்கு கிடைத்துள்ள தகவல் மேற் குறிப்பிட்ட பேட்டியில் சரத் பொன்சேகா விடுத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்ப டையிலேயே அமைந்துள்ளதாக தனது கடிதத்தில் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட் டுள்ளார். அத்துடன் நடேசன், புலித்தேவன், ரமேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உயிரிழந்த சூழ்நிலை தொடர்பாக விடுக் கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சிலவற்றை 58 ஆவது படைப்பிரிவுடன் அப்போது இருந்து வந்த ஊடகவியலாளர்களின் கூற்றுக்கள் உறுதி செய்வதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். அனைத்து ஆயுத மோதல்களுக்கும் பொருத்தமான சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் குறிப்பாக 1949 இன் ஜெனீவா ஒப்பந்தத்தின் 5 ஆவது ஷரத்தை சுட்டிக்காட்டும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தனது கடிதத்தில் குற்றச்சாட்டுகளின் சரியான தன்மை பற்றி கேட்டுள்ளதுடன் அக்குற்றச்சாட்டுகள் சரியானவை அல்ல என்று கூறுமிடத்து அது பற்றிய தகவல் மற்றும் ஆவண சான்றுகளையும் கேட்டுள்ளார். அத்துடன் நடேசன், புலித்தேவன், மற்றும் ரமேஷின் குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான தகவல்களும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளன. இதேவேளை ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரின் கடிதத்துக்கு உத்தியோகபூர்வ பதில் அனுப்புவது மற்றும் தேவையான நடவடிக்கை எடுப் பது தொடர்பாக தீர்மானிக்கும் முன்னர் அக்கடிதம் தொடர்பாக அரசாங்கம் கவனமாக பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. | |||
| |||
22 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக