புலிகளுக்கு பணம் சேகரித்த மூவருக்கு எதிராக மெல்பேர்ன் மன்றில் வழக்கு
புலிகளுக்கு பணம் சேகரித்ததாக ஆரூ ரன் விநாயகமூர்த்தி சிவராஜா யாதவன் மற்றும் ஆறுமுகம் ரஜீவன் ஆகியோர் கடந்த 2007 இல் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை இன்று மெல்பேர்ன் உச்சநீதிமன்றில் விசாரிக்கப்ப ட்டுள்ளது.
இவர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டதும் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள் என மேற்படி மூவருக்குமாக வாதாடுகின்ற வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். நேற்றைய விவாதத்தின்போது இவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மூன்றாவது குற்றத்துக்காக எதுவித சான்றுகளும் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள இரு குற்றங்களை அதாவது பணமும் மின்சார உபகரணங்களும் சேகரித்ததாக கூறப்படுவதை விநாயகமூர்த்தி ஏற்றுக்கொள் ளக்கூடும் என வக்கீல் கூறியுள்ளார்.
இடம்பெயர்ந்தோர் தேர்தலில் தடையின்றி வாக்களிக்க சகல ஒழுங்குகளும் முன்னெடுப்பு 1 1ஃ2 இலட்சம் பேர் வாக்களிக்க முடியாதென்ற குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரிப்பு மோதல் காரணமாக இடம் பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமென சில தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு தாம் மீள்குடியேற்றப்பட்ட இடங்களிலும் வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு வவுனியாவிலும் வாக்களிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக வவு னியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணை யாளர் ஏ. கருணாநிதி தெரிவித்தார். இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களில் அதிகமானவர் களின் பெயர்கள் 2008 வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளதெனவும் அவர் களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிப் பதற்கான சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும் வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. இடம் பெயர்ந்த மக்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கிராம சேவகர்களினூடா கப் பதியப்பட்டுள்ளதோடு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார். கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்ட வாக் காளர்கள் தேர்தலில் விண்ணப்பிப்பதற்காக (இன்று) 24 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 12 ஆயி ரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பி த்துள்ளதோடு மேலும் பலர் இறுதி நேரத்தில் விண்ணப்பிக்கத் தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு வவுனியாவில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. நலன்புரி முகாம்களில் உள்ள முல்லைத் தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களு க்கு நேரடியாக வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கருணாநிதி கூறினார். தேசிய அடையாள அட்டை மற்றும் தற்காலிக அடையாள அட்டை என்பன வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கம் இளைஞர்இ யுவதிகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்ததாலும் தமிழ் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிய தாலும் பெரும்பாலான வன்னி மக்களுக்கு தமது அடையாள அட்டைகள்இ ஆவணங்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்களை இழ க்க நேரிட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னி மக்கள் தமது சகல உடை மைகளையும் கைவிட்டு புலிகளிடம் இருந்து தப்பி ஓடி வந்தது தெரிந்ததே. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்குஇ கிழக்கு மாகாணங்களை முழுமையாக மீட்டதையடுத்து வடக்குஇ கிழக்கு மாகாண மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க முதற்தடவையாக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. |
பிரபாவின் பெற்றோர்இ சூசையின் மனைவி ஆகியோரையும் இராணுவமே காப்பாற்றியது வெள்ளை கொடியுடன் வந்தவர்களை இராணுவம் சுட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டுவது துரோகமானது (எம்.ஏ.அமீனுல்லாஇ கண்டி தினகரன் சுழற்சி நிருபர்) இலங்கை இராணுவம் மிலேச்சத்தனமான இராணுவமல்ல. மிலேச்சத்தனம் இராணுவமாக இருந்தால் பிரபாகரனின் தாயார்இ சூசையின் மனைவிஇ ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் காப்பாற்றப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கை இராணுவம் வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை கொலை செய்த இராணுவமாக உலகிற்கு காட்ட முனைவது துரோகத்தனமானதாகும். இதனை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். மிலேச்சத்தனமான இராணுவம் என்பதை உலக நாடுகளும் ஏற்றுக் கொள்ளாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் பல்கலைக்கழக கல்விமான்கள்இ டாக்டர்கள்இ சட்டத்தரணிகள்இ பெருந் தோட்ட முகாமையா ளர்கள்இ புத்திஜீவிகள் மத்தியில் செவ்வாய்க் கிழமை இரவு (22.12.2009) புத்திஜீவிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் ஜனாதிபதி தமதுரையில்இ நான் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை விட்டு விட்டு ஐக்கிய நாடுகள் சபைஇ மனித உரிமைகள் சபை ஆகியவற்றின் கேள்விகளுக்கு பதிலளிக் கும் கடமையில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்த நிலைக்கு முன்னாள் தளபதியே காரணமாகும். ஏன் இப்படி ஒரு துரோகத்தினை புரிந் தார் என்று தெரியவில்லை. இது ஜனா திபதித் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்க ¡கவா? அல்லது வெளிநாட்டு சக்திகளின் சதி காரணமாகவா? என தெரிய வில்லை. எந்த வெளிநாட்டு சக்திகளுக்கும் நாம் அடிபணியப் போவதில்லை. யுத்தத்தினை நிறுத்துமாறு பல நாடுகள் கோரிக்கைவிடுத்தன. பல தலைவர்கள்இ ஜனாதிபதிகள்இ பிரதமர்கள் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார்கள். சில நாட்டு தலைவர்கள் சிலரை தூதுவிட் டார்கள். நான் உண்மையை தெளிவுபடுத் தினேன். சுதந்திரத்திற்கு முன் அவர்களது காலணித்துவ நாடுகளில் ஒன்றாக நாம் விளங் கினோம். ஆனால் இப்போது இலங்கை உங்கள் காலணித்துவ நாடு இல்லை என தெளிவாக கூறினேன். ஆனால் சாதாரண தமிழ் மக்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம் என பல தடவைகள் எமது இராணுவத்திற்கு உத்தரவிட்டேன். எமது இராணுவமும் எனது உத்தரவை ஏற்று சாதாரண மக்களைக் காப்பாற்றினார்கள். இதனை உலகம் அறியும். யுத்தத்திற்கு எதிராக யுத்தம் செய்யக்கூடிய பலத்தினையும்இ யுத்தத்தினை கொண்டு நடத்தக்கூடிய மனவலிமையையும் மன உறுதியினையும் நான் ஏற்படுத்தினேன். முழு உலகமும் பயந்திருந்த பயங்கரவாதத் தினை முற்றாக ஒழித்தோம். எனக்கு இந்நாட்டினை கையளிக்கும் போதும்இ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொருளாதாரத்தினை பற்றி மக்கள் கேட்கவில்லை. பயங்கரவாதத்தினை அழிக்குமாறே மக்கள் கேட்டனர். அதனையே நான் செய்தேன். இனி சுதந்திரமான இலங்கையின் பொருளா தாரத்தை முன்னேற்றுவோம். யுத்த காலத்திலும் நீர்மின்திட்டங்கள்இ துறைமுக திட்டங்கள்இ விமான நிலையம் நிர்மாணத்துடன்இ கமநெகுமஇ மகநெகும போன்ற வீதிஇ கிராம அபிவிருத்தி வேலைகளையும் செய்துள்ளோம். நாட் டுக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைஇ கடன் பிரச்சினை ஆகியவற்றை தீர்த்து ள்ளோம். சகல கடன்களையும் செலுத்தி யுள்ளோம். ஈரானுடன் பேசி ஏழுமாத வட்டியில்லா கடன் மூலம் பெற்றோல் தேவையை நிறைவேற்றினோம். லிபியாஇ இந்தியாஇ பாகிஸ்தான்இ சீனா ஆகிய நாடுகள் எமக்கு உதவின. எல்லாவற்றிற்கு மேலாக இந்தியாஇ பாகிஸ்தான்இ சீனா ஆகிய நாடுகளை சமநிலைப்படுத்தி வைத்திருந் தோம். யாருடைய கட்டலைக்கு அடிபணி யாது பொருளாதாரத்திலும்இ யுத்தத்திலும் வெற்றிகண்டோம். வடகிழக்கு மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை. அவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்கள் முன்கூட்டியே நான்கு வருட முடிவில் நடத்துகிறேன். வட கிழக்கு தமிழ் மக்களும் தமது ஜனாதிபதியை தெரிவு செய்ய உரிமை யுடையவர்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளேன். மிஹின் ஏயார் பற்றி பேசுகின்றனர். அன்று அமெரிக்கா ஆயுத உதவி செய்தபின் அந்த ஆயுதங்களுக்கு தேவையான ரவைகள்இ குண்டுகள் அமெரிக்கா தந்து தவிய போது அதனை எடுத்து வர மிஹின் எயாரையே அனுப்பினேன். ஜோர்ஜ் புஷ் நிர்வாகமும் இதற்கு உதவியது. எமது விமானப்படை சரியான இலக்குகளை தாக்கியது. கப்பற்படை ஆயுத கப்பல்களை அழித்தது. இவையே இராணுவ வெற்றிக்கு காரணமாகும். இன்று இராணுவ படையையும்இ வெற்றிகொண்ட 58 வது படையினரையும் முன்னாள் தளபதி காட்டிக்கொடுக்க முயற்சிப்பது எந்தவகையில் நியாயமாகும். இராணுவ வெற்றிக்குஇ அதன் செயற் பாடுகளுக்கு இராணுவ தளபதி முதல் கடைசி இராணுவ வீரர்வரை பங்களித் துள்ளனர். அவர்களை காட்டிக்கொடுப்பது துரோகமில்லையா? கண்டியில் நடைபெற்ற எதிரணி கூட்ட த்தில் எனது குடும்பத்தைப்பற்றி திட்டித் தீர்த்துள்ளனர். எனது பிள்ளைகளை திட் டியுள்ளதோடு சாபமிட்டுள்ளனர். எனது குடும்பத்துக்கு சாபமிடுவது நியாயமா? ஏழு தடவைகள் எனது குடும்பத்திற்கு இடிவிழ வேண்டும் என ஒரு கட்சித் தலைவர் சாபமிட்டுள்ளார். எனது மகன் போர்படை வீரராக வந்தமை பிழையானதா? ஏனைய குடும்பத்திலுள்ளவர்கள் யுத்தம் புரியும் போது எமது இராணுவத்திற்கு இளை ஞர்கள் தேவைப்பட்ட போது எனது மகனையும் படையில் சேர்த்தது மூலம் நான் முன்மாதிரியாக நடந்து காட்டி யுள்ளேன். இதற்கு சாபமிடுவது சரியா? எனது சகோதரர்கள் பற்றி மிகவும் கேவலமாக பேசியுள்ளனர். ராஜபக்ஷ சகோதரர் கம்பனி என கூறியுள்ளனர். நான் சொத்துச் சேர்த்ததாக கூறியுள்ளனர். கண்டி நகர சிட்டி செண்டர் காணியில் கட்டப்படும் ஹோட்டல்கள் கொழும்பு 8pகுருநாகல் காணி ஆகியவற்றை நானும் எனது சகோதரர்களும் வாங்கி யுள்ளதாக கூறியுள்ளனர். இதனைநிரூபிக்க முடியுமா. எனது சகோதரர் பசில் ராஜபக்ஷ ஒரு பாராளுமன்ற உறுப்பினர். பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்களை பிரகடனப்படுத்த வேண்டும். அவரது சொத்து பிரகடனத்தினை பார்க்க முடியும். நானும் சொத்து சேர்க்கவில்லை. எனது சகோதரர் கோட்டாபேக்கும் சொத்துகள் இல்லை. இவை அரசியலின் கீழ்த்தரமான பிர சாரங்களாகும். எமது குடும்பம் சகோதரர் கம்பனிதான். ஏனெனில் 1936 இல் எனது மூத்த தாத்தா உறுப்பினர் அவர் இறந்தபின் அவரது மகனான என்னுடைய தாத்தா உறுப்பினர். அவருக்கு பின் என் தகப்பனார் உறுப்பினர். 1945 ஆம் ஆண்டு சட்டநிறுவன சபையில் எனது அப்பா போட்டியின்றி தெரிவானவர். அதன்பின் நான்இ எனது சகோதரர்கள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம். இதற்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை விசுவாசமே காரணமாகும். நீங்கள் புத்தி ஜீவிகள். உங்களுக்கு யுத்தம்இ வெற்றிஇ பொருளாதாரஇ சவால்கள்இ எதிர்கால சவால் கள் பற்றியெல்லாம் தெரியும். நான் இறுதிவரை தாய்நாட்டுக்கு விசு வாச முடையவனாகவே இருப்பேன். சகல மக்களையும் காப்பாற்றுவேன். யாருக்கும் துரோகமிலைக்கமாட்டேன். இராணுவத்தை காட்டிக்கொடுக்க மாட்டேன்.” என்னை சிறைப்படுத்துவதாக கூறியுள்ளனர். எனக்கு ஏற்கனவே சிறை அனுபவம் உண்டு. ஜே.ஆர். ஜெயவர்தன என்னை 3 மாதம் சிறையிலிட்டார். இதுதவிர சுனாமியின் போது “ஹெல்ப் அம்பாந்தோட்டை நிதியை மோசடி செய்ததாக கூறினார்கள். ஆனால் ஜனாதி பதித் தேர்தலில் அம்பாந் தோட்டையிலேயே அதிகம் வாக்குகளை பெற்றார் என்றார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக