28 டிசம்பர், 2009




தமிழர் பகுதிகளில் பிரசாரம்: பொன்சேகா திட்டம்


கொழும்புஇ டிச.27: இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவில் போட்டியிடும் ஓய்வுபெற்ற ராணுவத் தலைமை தளபதி சரத் பொன்சேகாஇ தமிழர்களுடைய பகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் செய்தும் பொதுக்கூட்டங்களில் பேசியும் அவர்களுடைய ஆதரவைப் பெற முடிவு செய்திருக்கிறார். இதற்காக ஜனவரி 2 முதல் அவர் தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்குகிறார்.

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கிறது.

வடக்கிலும் கிழக்கிலும் போர் ஓய்ந்த பிறகு முழு அளவில் சகஜ நிலைமை திரும்பவில்லை.

பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும் தங்களுடைய நலன்களைக்காக்க முன்வரமாட்டார்கள் என்ற அவநம்பிக்கை தமிழர்களிடம் வேரூன்றியிருக்கிறது.

ராணுவத்துடனான போருக்குப் பிறகு தமிழர்கள் தங்க இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள அகதிகள் முகாம்களில் ஏராளமானோர் இன்னமும் தங்கியிருக்கின்றனர்.

இவர்களில் சுமார் 15இ000 பேர் மட்டும் வாக்காளர் பதிவு விண்ணப்பங்களை வாங்கி முறைப்படி நிரப்பித்தந்துள்ளனர். மற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

தன்னை எதிர்த்துப் போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு பணபலம்இ அதிகார பலம் இருப்பதால் தமிழர்களின் ஆதரவைத் தான் பெறுவதுதான் வெற்றியை உறுதி செய்யும் என்று பொன்சேகா கருதுகிறார்.

தமிழர்களின் நல்லெண்ணத்தைப் பெறும் முயற்சியாக ஜனவரி 2-ம் தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கோவிலில் வழிபாடு நடத்திய பிறகே தேர்தல் பிரசாரப் பணிகளைத் தொடங்குகிறார்.

பிறகு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள்இ மாணவர்கள் ஆகியோருடன் விவாதம் நடத்துகிறார்.

தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களிடமே கேட்டறிவார். தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சேர்க்க தான் வைத்திருக்கும் திட்டங்களை அப்போது அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்சேகா பேசும் பொதுக்கூட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட இலங்கை அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழர் கட்சித் தலைவர்களும் பேசுவார்கள் என்று தெரிகிறது.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை மன்னார்இ வவுனியா நகரம் ஆகிய இடங்களில் பொன்சேகா பேசுகிறார்.

ஜனவரி 4-ம் தேதி கிளிநொச்சிஇ முல்லைத் தீவு ஆகிய ஊர்களிலும் ஜனவரி 5-ம் தேதி மட்டக்களப்புஇ அம்பாறை ஆகிய ஊர்களிலும்இ ஜனவரி 6-ம் தேதி முத்தூர்இ திரிகோணமலை ஆகிய ஊர்களிலும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

இலங்கைத் தமிழர்களின் நிலைமைதான் பரிதாபமானது. ஒரு புறம் அவர்களைக் கொல்ல படைகளை ஏவிய அதிபர் மகிந்த ராஜபட்ச மீண்டும் வேட்பாளராகக் களத்தில் நிற்கிறார். எதிர்த்து நிற்பவரோ அவருடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கியவர்.

தமிழர்கள் ஆதரிக்க வலுவானஇ தமிழ் வேட்பாளர் எவரும் இல்லை. இந்தத் தேர்தலுக்குப் பிறகு தமிழர்களின் கோரிக்கை ஏற்கப்படும்இ அவர்கள் சம உரிமையுள்ள இலங்கைக் குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்ற உத்தரவாதமும் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக