3 நவம்பர், 2009

சட்டவிரோத குடியேற்றவாசிகளை தாய்நாட்டுக்கு அனுப்புமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை


வெளிநாடுகளில் வழி மறிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சட்ட விரோத குடியேற்றவாசிகளைத் தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சு கேட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா, கனடா ஆகிய நாடுகளின் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளினால் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பலர் வழி மறிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லகம தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் இலங்கையைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக அமைச்சர் கூறினார். இவர்களில் இலங்கையர் பற்றி அறிந்து கொள்ள அந்தந்த நாட்டு இலங்கைக்கான தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக