3 நவம்பர், 2009

தகவல்களை பொன்சேகா வழங்குவதற்கோ அமெரிக்க கோருவதற்கோ உரிமையில்லை: அரசாங்கம்


அனுமதியின்றி மூன்றாம் தரப்புக்கு தகவல்களை வழங்குவதற்கு கூட்டுப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சட்ட ரீதியாக எவ்விதமான அனுமதியும் இல்லை என்பதுடன், தகவல்களை கோருவதற்கு அமெரிக்காவுக்கு எவ்விதமான உரிமையும் கிடையாது என அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவினால் தவறான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதனால் அவ்வழைப்பை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு அமெரிக்க அரசாங்கத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரூடாக அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சரத்பொன்சேகா தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் தகவல் மூலமாக அமெரிக்க ஜெனரல் சரத்பொன்சேகாவை பயன்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வெளியான செய்திகளையடுத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து மேற்படி விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியதன் பின்னர் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியது.

வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற இந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை தகவல்களை தெரிந்கொள்ளும் பொருட்டே அமெரிக்கா பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலளார் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிரேஷ்ட இராணுவ அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு மூன்றாந்தரப்புக்குத் தகவல்களை வழங்குவதற்கு சட்டரீதியில் எவ்விதமான உரிமையும் இல்லை என்பதுடன் அமெரிக்காவினால் தகவல்களை கோரவும் முடியாது. ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் கடந்த 28 ஆம் திகதி தொøலபேசி கலந்துரையாடலை மேற்கொண்ட உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு நாளை (4 ஆம் திகதி) நேர்காணல் ஒன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அவ்வழைப்பு தவறாது என்றும் அதனை உடனடியாக நிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உடனடியாக அமெரிக்க அரசாங்கத்திற்கு அறிவிக்குமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.

கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகா இலங்கை படைகளின் உயர்நிலை அதிகாரியாவார். அவரை தகவல் பெற பயன்படுத்துவதற்கு முயற்சிப்பது இலங்கையின் இறைமைக்கு எதிரான செயற்பாடாகும்" என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

கேள்வி; அமெரிக்க தூதுவரின் பதில் எவ்வாறு இருந்தது?

பதில்: கவனம் செலுத்தி ஒத்துழைப்பு நல்கினார்

கேள்வி: அமெரிக்க சட்டத்திட்டத்தின் பிரகாரம் ஜெனரல் சரத்பொன்சேகா தகவல்களை வழங்கமுடியுமா?

பதில்: நான் அமைச்சர். அரசாங்கத்திற்கும் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பிற்கும் கட்டுப்பட்டவன். அதேபோல் படையின் சிரேஷ்ட அதிகாரி முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கு மட்டுமே தகவல்களை வழங்கமுடியும்.

கேள்வி: ஜெனரல் சரத் பொன்சேகா கிறீன் காட் ஹோல்டர் என்பதனால் அமெரிக்காவினால் விசாரிக்க முடியும் தானே?

பதில்: கிறீன் காட் ஹோல்டர் என்றாலும் அவர் இலங்கை பிரஜையாவார். எனது பைக்குள் கிறீன் காட் இருப்பதற்காக நான் அரசாங்கத்திகோ அமைச்சு பதவிக்கோ எதிராக செயற்படமுடியாது.

கேள்வி:/b> ஜெனரல் சரத் பொன்சேகா நேர்காணலில் பங்குபற்றுவரா?

பதில்:அதனை அவரிடமே கேட்க வேண்டும் அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவருக்கு இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக