16,881 குடும்பங்களைச் சேர்ந்த 51,982 பேர் வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம்-
இதுவரையில் 16ஆயிரத்து 881குடும்பங்களைச் சேர்ந்த 51ஆயிரத்து 982பேர் வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியேற்றப்பட்டிருப்பதாக யாழ். அரசஅதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இவர்களில் அல்லைப்பிட்டி, மண்கும்பான் பிரதேசத்தில் 433குடும்பங்களைச் சேர்ந்த 1,450பேரும், யாழ்ப்பாணம் நலன்புரி முகாம்களின் 2,497குடும்பங்களைச் சேர்ந்த 7,052பேரும், வவுனியா மன்னார் நலன்புரி முகாம்களின் 13ஆயிரத்து 951குடும்பங்களைச் சேர்ந்த 43ஆயிரத்து 350பேரும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் சொந்த இடங்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன். அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு தேவையான உலருணவுப் பொருட்களும் 5ஆயிரம்ரூபா அரசாங்க நிதியுதவி உடனடியாகவும் (யூ.என்.எச்.சீ.ஆர்) ஐ.நா அகதிகளுக்கான பேரவையின் 20ஆயிரம் ரூபா வங்கி வைப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைவிட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியொன்றும் ஐ.நா.அகதிகளுக்கான பேரவையினால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக