5 நவம்பர், 2009

வவுனியா வைத்தியசாலை அவசர சிகிச்சைபிரிவு மற்று மகப்பேற்று விடுதி திறப்பு விழாவில்புளொட் தலைவர்!


வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் மகப்பேற்று விடுதி திறப்பு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி.சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

அந்த நிகழ்விற்கு புளொட் தலைவரும் முன்னைநாள் வன்னிமாவட்ட பா. மாகிய .சித்தார்த்தன் அவர்கள் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். வவுனியா வைத்தியசாலை இன்று இவ்வளவு தூரம் தரமுயர்ந்து நிற்பதற்கு, புளொட் தலைவர் 1994ம் ஆண்டு பா.உறுப்பினராக இருந்த காலத்தில் போடப்பட்ட அத்திவாரங்களும் அதற்கான முன்னெடுப்புக்களுமே இன்று மாடி கட்டிடங்களுடன் சிறந்த
வைத்தியசாலையாக தரமுயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

படம் இணைக்கப்பட்டுள்ளது






.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வன்னிப் பகுதிக்கு விஜயம்-


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்றையதினம் காலையில் வன்னிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து படையினரால் மீட்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டுள்ளதுடன், வன்னி முழங்காவிலில் உள்ள 651வது இராணுவ படைத்தளத்தில் இராணுவ உயரதிகாரிகளுடன் அவர் சந்திப்பினையும் மேற்கொண்டுள்ளார். அத்துடன் படைவீரர்கள் மத்தியிலும் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார். இதேவேளை கிளிநொச்சி மற்றும் துணுக்காய் பகுதிகளில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களையும் ஜனாதிபதி இன்று சந்தித்து அவர்களின் நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையுமா?:நாளை முடிவு


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரச கட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்க்கட்சிகள் அடங்கிய ஐக்கிய தேசிய முன்னணி அணி திரண்டுள்ளது. இதில் ததேகூ இணைவது குறித்த முடிவு நாளை தெரியவரும் என அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இந்தப் புதிய கூட்டு முன்னணியில் இணைவது என தமிழ்த் தேசிய கட்சியின் சார்பில் கொள்கையளவில் முடிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்த இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை கொழும்பில் கூடி, இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என அந்த முக்கியஸ்தர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை மாற்ற வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகின்ற போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முதன்மைப்படுத்துவதாகவே இருக்கின்றது.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் எந்த வகையில், என்ன வகையான முடிவோடு இணைந்து செயற்படுவது என்பது குறித்து நாளைய கூட்டத்தில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்
பிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம்


புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

விசா வழங்கும் செயன்முறையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளமையால் புதிய விசா விண்ணப்பங்கள் தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதென தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 18 ஆம் புதன்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அதன் பின்னர் விசா விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மீண்டும் எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையே ஆரம்பமாகும் என்றும் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது
வவுனியாவிலிருந்து யாழ். வந்தோர் தொடர்மழையால் பெரும் பாதிப்பு



இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட மக்கள் தற்போது பெய்துவரும் தொடர்மழையால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று இரவு வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து 3150 இற்கும் மேற்பட்டவர்கள் பஸ் மூலம் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு துரையப்பா விளையாட்டரங்கில் இறக்கி விடப்பட்டனர்.

அடைமழையின் மத்தியில் இரண்டு கட்டங்களாக அழைத்து வரப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நேற்று மாலை துரையப்பா விளையாட்டரங்கிற்கு வந்து சேர்ந்தனர். இவர்களுக்கான பதிவுகள் மற்றும் பணக் கொடுப்பனவுகள் செயலக அலுவலர்கள் மற்றும் நல்லூர் சண்டிலிப்பாய உடுவில் பிரதேச செயலக ஊழியர்கள் மேற்கொண்டார்கள்.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த மக்களுக்கான மீள் குடியேற்றக் கொடுப்பனவுகளை வழங்கினார். யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ் உட்பட மற்றும் அலுவலர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

இரண்டாம் கட்டமாக மேலும் 1500 இற்கும் மேற்பட்டவர்கள் இரவு பத்து மணியளவில் அழைத்து வரப்பட்டனர். நள்ளிரவு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் கொண்டுவந்த உலர்உணவுப் பொருட்களான அரிசி, மா மற்றும் கருவாடு போன்றவை மழையில் நனைந்துவிட்டதாக பொது மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

நள்ளிரவு வேளை அழைத்து வரப்பட்ட மக்கள் மழை காரணமாக இருக்கக் கூட இடமில்லாது பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, November 3, 2009

அவுஸ்திரேலிய கடலில் மூழ்கிய படகில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடர்கிறது-

அவுஸ்திரேலியாவின் கோகொஸ் தீவுகளுக்கு வடமேற்குக் கடலில் நேற்று முன்தினமிரவு மூழ்கிய படகில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணி இடம்பெறுவதாக தெரிவித்துள்ள கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம், கடல்வழி புலம்பெயர்வின் ஆபத்தை இச்சம்பவம் வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை இரு வெளிநாட்டு வர்த்தக கப்பல்கள் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதாகவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் அவுஸ்திரேலிய அதிகாரிகளும் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. 42பேருடன் படகு மூழ்கியபோது 27பேர் காப்பாற்றப்பட்டிருப்பதுடன், ஏனையோர் நீரில் மூழ்கி பலியாகியிருக்கலாமென அஞ்சப்படுகிறது. அத்துடன் காணாமற் போனோரில் இதுவரை 03 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காணாமற் போனவர்கள் தொடர்பாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் காதி குளுக்மான் ஆழ்ந்தை கவலை வெளியிட்டுள்ளார். கடல்வழியாக ஆட்களைக் கடத்திச்செல்லும் அபாயத்தை இந்த துன்பகரமான சம்பவம் வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். மக்களின் துன்பத்திலிருந்து ஆதாயம் தேடுவதற்கு ஆட்களைக் கடத்திச் செல்வோர் தயாராகவுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். இச்சம்பவத்தில் சுமார் 12பேர்வரை கடலில் மூழ்கியிருக்கலாமென அஞ்சப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக