5 நவம்பர், 2009

பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானம்-

புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தந்தையான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்துசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வேலுப்பிள்ளையை படையினர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதால், அவரது முகவரி குறித்த பிரச்சினை காரணமாக தற்காலிகமாக ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்துச்செய்ய தீர்மானித்துள்ளதாக ஓய்வூதிய ஆணையாளர் கே.ஏ.திலகரட்ன கூறியுள்ளார். வேலுப்பிள்ளை, 1943 பெப்ரவரி மாதம் 01ம் திகதி இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அவர் படையினரால் கண்டுபிடிக்கப்படும் வரையில் கிளிநொச்சி அரசஅதிபர் திணைக்களத்திலிருந்து 16ஆயிரத்து 865ரூபா ஓய்வூதியமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். வேலுப்பிள்ளையிடம் விசாரணைகள் பூர்த்தியடைந்தபின் நிரந்தர முகவரி அறிவிக்கப்படும் பட்சத்தில் நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் கே.ஏ.திலகரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக