30 அக்டோபர், 2009

இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் அபாயம்
- இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக பி.பி.சீ உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்திர தீவுகளுக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் அவுஸ்திரேலிய கப்பலில் குறித்த இலங்கையர்கள் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆள் அடையாள சோதனைகளை நடத்துவதற்கு இலங்கை அகதிகள் போதிய ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் நாடு கடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என இந்தோனேஷிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய, குறித்த அகதிகள் விவகாரத்தை கவனிக்க இந்தோனேஷியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கை அகதிகள் தொடர்ந்து கப்பலிலிருந்து வெளியேறி இந்தோனேஷியாவுக்குள் செல்ல மறுப்பு தெரிவித்தால் சிக்கல் நிலை உருவாகக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களின் ஆள் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவர்களுக்கு உதவிகளை வழங்க முடியும் என இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் டெக்கு பெஸியாஸா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக