30 அக்டோபர், 2009

ராஜரட்னத்தின் பிணைத் தொகையைக் குறைக்குமாறு கோரிக்கை

, 100 மில்லியன் டொலர்களில் இருந்து 25







உட்சந்தை வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னத்தின், பிணை அபராதத் தொகையை, 100 மில்லியன் டொலர்களில் இருந்து 25 மில்லியனாகக் குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பங்கு உட்சந்தை வணிகத்தில் பல பில்லியன் டொலர்களை மோசடி செய்த பேர்னாட் மடோப் என்பருக்கு, 10 மில்லியன் டொலர்களே அபராதம் அறவிடப்பட்டமை இதற்காகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவரான ராஜ், குற்றவாளியாகக் காணப்பட்டாலும் அவருக்கு 10 வருடத்துக்கும் குறையாத தண்டனையே வழங்கப்படும் என அவருடைய சட்டத்தரணி ஜோன் டௌட் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ராஜரட்னத்தின் பிணைக்காக அசாதாரண நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டுள்ள மொடப்புக்கு, 150 வருடகால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ராஜ் ராஜரட்னத்துக்கான பயணத்தூரமும், நியூயோர்க் நகருக்குள் 175 கிலோமீற்றர் தூரம் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பிறந்த ராஜ் ராஜரட்னம், சுமார் 1.3 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுடன், உலகின் 549ஆம் இடத்தை வகிக்கும் கோடீஸ்வரராவார்.

அவர் நியூயோர்க் நகரில், 17.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மாளிகையில், தமது மனைவியுடன் 21 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையில் ராஜ் ராஜரட்னம் தமது தவறை இதன் பின்னர் திருத்திக் கொள்வார் எனச் சட்டத்தரணி டெளட் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக