இராணுவத் தாக்குதல் ஏதாவது நடத்தப்படும் பட்சத்தில் ஈரான் பதிலடி கொடுக்கும் - ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நஜாத் | |
இராணுவ தாக்குதல் ஏதாவது நடத்தப்படும் பட்சத்தில், ஈரான் அதற்கு எதிராக பதிலடி கொடுக்கும் என ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈராக் ஈரான் போர் ஆரம்பமான ஞாபகார்த்த தினத்தையொட்டி தெஹ்ரானில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பங்கேற்ற விமானமொன்று தென் தெஹ்ரானில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானார்கள். எனினும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கையிடப்படவில்லை. கடந்த ஜூலை மாதம் ஈரானில் வர்த்தக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 180 பேர் பலியானார்கள். ""ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க எந்தவொரு அதிகாரமும் நினைக்க முடியாது'' எனத் தெரிவித்த அஹ்மடி நஜாத், ""இன்று ஈரான் அதிகாரத்துவம் பொருந்தியதாக உள்ளது'' என்று கூறினார். |
24 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக