9 ஏப்ரல், 2010

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமலுக்கு அதிகூடிய வாக்குகள்

நிமால், ஜோன், பவித்திராவுக்கும் விருப்பு வாக்குகள் அதிகம்
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. சார்பில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 566 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

முதன் முதலாகத் தேர்தலில் போட்டியிட்ட இவர் இவ்வளவு பெருந்தொகை வாக்குகளைப் பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதேவேளை, பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 990 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதே மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த சமரவீர என்பவர் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 414 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் ஜோன் செனிவிரட்ன, பவித்திரா வன்னி ஆராய்ச்சி ஆகியோர் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 816 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஒரு இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலில் போட்டியி ட்ட இரு சிரேஷ்ட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறு ப்பினர்கள் போட்டியிட்டும் வேட் பாளர் பட்டியலில் இள வயதுடைய நாமல் ராஜபக்ஷ இந்த வெற்றியை பெற்றுள்ளமையானது நாமல் ராஜப க்ஷவின் அரசியல் பிரவேசத்தை மக்கள் ஏற்றுள்ளார்களென்றே தெரி கிறது
மேலும் இங்கே தொடர்க...

தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு பாரிய பின்னடைவு

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை தமிழரசுக் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் இத் தேர்தலில் அகில இலங்கை தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் மூலம் 22 பாராளுமன்ற ஆசனங்களை தமிழரசுக் கட்சி தனதாக்கிக் கொண்டிருந்தது.

இருப்பினும் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் 15 ஆசனங்களுக்கும் குறைவான எம்.பி.க்களையே தமிழரசுக் கட்சியால் வெற்றிபெற முடிந்திருக்கின்றது.

தமிழரசுக்கட்சி இத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், வன்னி மாவட்டத்தில் இரு ஆசனங்களை யும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் இழந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸணுக்கு அதிகூடிய விருப்பு வாக்குகள்


யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்கு ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு கிடைத்துள்ள விருப்பு வாக்கு 28 ஆயிரத்து 585.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி போட்டியிட்டு மூன்று ஆசனங்களை பெற்றுள்ளது. யாழ். மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரீன் உதயன், (13128) முன்னாள் யாழ். எம்.பி. முருகேசு சத்திரகுமாரும் (8105) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஐவர் தெரிவாகியுள்ளனர். மாவை சேனாதிராசா (20501), சுரேஷ் பிரேமச்சந்திரன் (16425) அப்பாத்துரை விநாயகமூர்த்தி (15311), ஆர். சரவணபவன் (14961) சிவஞானம் சிறிதரன் (10057) ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் துணைவியார் திருமதி விஜயகலாவும் (7160) பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 19 சதவீத வாக்களிப்புகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று நன்றிக்கடனோடு மக்கள் வாக்களிப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் வேண்டுகோளை ஏற்று நன்றிக் கடனோடு நாட்டு மக்கள் வாக்களித்திருப்பதையே பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிப்படு த்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டளஸ் அழகப் பெரும தெரிவித்தார். அதேநேரம் எதிர்வரும் சிங்கள-தமிழ் புத்தாண்டு ஏற்பாடுகளில் மக்கள் அதிக ஆர்வம் காட்டியதன் விளைவாகவே வாக்களிப்பு மந்தமாக இடம்பெற்றதாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.

பொதுத் தேர்தல் முடிவுகள் குறி த்து மேற்கண்டவாறு குறிப்பிட்ட அமைச்சர் டளஸ் அழகப் பெரும மேலும் கூறுகையில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு. பெற்ற வாக்குகளை விடவும் அதிக ப்படியான வாக்குகளை பல தொகு திகளில் இம் முன்னணி பெற்றிருக் கின்றது.

இதனை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், ஐ.ம.சு. முன்னணியினதும் வேண்டுகோளை ஏற்று நன்றிக் கடனோடு நாட்டு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.

இதேநேரம் இத்தேர்தலில் எதிரணியினர் பாரிய தோல்வியைத் தழுவுவதற்கு அவர்கள் தங்களது பொறுப்புக்களிலிருந்து விலகிச் செயற்பட்டதே காரணமாகும். இதற்காக அவர்கள் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாவர்.

முப்பது வருட காலப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் மக்கள் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக இத்தேர்தலில் வாக்களித்தனர். அதற்குரிய வாய்ப்பு எமது ஜனாதிபதியினாலேயே பெற்றுக்கொடுக்கப்பட்டது என்றும் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் அங்கீகாரம் ஜனாதிபதி

வரலாற்றுப் புகழ்மிக்க இத் தேர்தல் வெற்றியானது ‘மஹிந்த சிந்தனை’ வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் வழங்கியுள்ள அங்கீகாரமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏழாவது பாராளுமன்றத் தேர்தலில் ஈட்டிக் கொண்டுள்ள மகத்தான வெற்றியையடுத்து விடுத்துள்ள செய்தியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது:-

தாய் நாட்டுக்கு எதிரான எத்தகைய சக்திகளையும் எதிர்கொண்டு தோல்வியுறச் செய்யக் கூடிய வகையிலான பலம்மிக்க பாராளுமன்றத்தைப் பெற்றுத்தருமாறு இலங்கை மக்களாகிய உங்களிடம் நான் கோரினேன். அதற்கிணங்க மூன்று தசாப்த விகிதாசாரத் தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பெற்றுக்கொடுத்துள்ழர்கள். பெற்றுக்கொண்டுள்ள இம் மாபெரும் வெற்றியானது மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்துக்கு மீண்டும் மீண்டும் நீங்கள் வழங்குகின்ற அங்கீகாரமென்றே நான் கருதுகின்றேன்.

இதன் மூலம் இலங்கை மக்களாகிய நீங்கள் தாய் நாட்டுக்கான புனிதமான பொறுப்பினை நிறைவேற்றியுள்ழர்கள். அத்துடன் என் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாப்பதற்கு நாம் கடமைப்பட் டுள்ளதுடன் இவ்வரலாற்று மக்கள் ஆணையை உலகின் முன்மாதிரியான நாடாக இலங்கையைக் கட்டியெ ழுப்புவதற்கான உன்னதமான பயணத்தின் முக்கியம் வாய்ந்ததொன்றாகவும் நான் கருதுகின்றேன்.

இலங்கையின் சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவதே இவ்வெற்றியின் மூலம் தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பொறுப்பாக வேண்டும். அத்தகைய உன்னதமான நோக்கத்திற்காக கைகோர்க்குமாறு சகல அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு தோல்வியடைந்தவர்க ளின் மனதைப் புண்படுத்தாது ஈட்டி க்கொண்டுள்ள வெற்றியை அமைதி யுடன் கொண்டாடு மாறும் கேட்டு க்கொள்கின்றேன்.

இத்தகைய வரலாற்று வெற்றியினைப் பெற்றுத் தந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த தேர்தல் ஆணையாளருக்கும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் தேர்தலில் போட்டியிட்ட சகல கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் பொறுப்புடன் செயற்பட்ட சகல ஊடகங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரி வித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டி, திருமலை மாவட்டங்களில் 35 வாக்களிப்பு நிலையங்களுக்கு மீள்வாக்குப் பதிவு



கண்டி மற்றும் திருமலை மாவட் டங்களிலுள்ள 35 வாக்களிப்பு நிலை யங்களுக்கு மீண்டும் வாக்கு பதிவு நடாத்தப்படவிருக்கின்றது.

இந்த 35 வாக்களிப்பு நிலையங்க ளுக்கும் எதிர்வரும் 16ம் திகதிக்கும் 22ம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் தேர்தல் நடாத்தப்படும் என்று தேர்தல் செயலக அதிகாரி யொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு மோசடி இடம்பெற்றது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவ்வாக்களிப்பு நிலையங்களின் வாக்களிப்பை தேர்தல் ஆணையா ளர் ரத்து செய்ததுடன் அவற்றுக்கு மீண்டும் வாக்குப்பதிவு நடாத்து வதற்கும் அவர் முடிவு செய்துள் ளார்.

கண்டி மாவட்டத்திலுள்ள நாவல ப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள 34 வாக்களிப்பு நிலையங்களுக்கும், திருமலை மாவட்டத்திலுள்ள கும்பு றுப்பிட்டி வாக்களிப்பு நிலையத் திற்கும் மீண்டும் வாக்குப் பதிவு நடாத்தப்படவிருக்கின்றது.

இந்த 35 வாக்களிப்பு நிலையங்க ளுக்கும் மீண்டும் வாக்குப் பதிவு நடாத்தப்பட்டு அவற்றின் முடிவுகள் வெளியிடப்படும் வரையும் இவ் விரு மாவட்டங்களுக்குமான இறுதி முடிவு அறிவிக்கப்படமாட்டாது என்றும் தேர்தல் செயலக அதிகாரி கூறியதுடன் நாடளாவிய ரீதியிலான முடிவும் வெளியிடப்படாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.ம.சு.முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி


ஏழாவது பாராளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின் படி) அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களிலும் வியாழனன்று தேர்தல் நடத்தப்பட்டது. ஆயினும் நேற்று இரவு வரை 20 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளே வெளியிடப்பட்டன.

திருகோணமலை, நாவலப்பிட்டி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. வன்முறைகளும், மோசடிகளும் இடம்பெற்றதாக ஊர்ஜிதமானதையடுத்து தேர்தல்கள் ஆணையாளர் அந்தத் தொகுதிகளிலுள்ள 35 வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவு செய்வதற்கு தீர்மானித்துள்ளார். இதற்கான திகதி இன்று வெளியிடப்படவுள்ளது.

இதனாலேயே மேற்படி இரு தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆயினும், அறிவிக்கப்பட்ட 20 மாவட்டங்களிலும் 117க்கும் அதிகமான ஆசனங்களை ஐ.ம.சு.மு பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. 46 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளதுடன் படுதோல்வி அடைந்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி 12 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஜனநாயக தேசிய முன்னணி ஐந்து ஆசனங்களை மாத்திரமே பெற்றிருக்கிறது.

இதன்படி, ஆளுங்கட்சி 70 வீத வாக்குகளைப் பெற்று மீண்டும் மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டத ற்கிணங்க நாட்டு மக்கள் நன்றிக் கடனைச் செலுத்தியுள்ளார்களென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுமார் 45 இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 21 இலட்சத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.

வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று முன்தினம் மாலை 4.30 இற்கு ஆரம்பமானபோதிலும், நேற்றிரவு 10.45 இற்கே முதலாவது தபால் மூல முடிவு வெளியானது. தொகுதி வாரியான முதலாவது முடிவு நேற்று அதிகாலை 01,05 இற்கு வெளியிடப்பட்டது. இதற்கமைய மாத்தறை கம்புறுபிட்டிய தொகுதியில் 18,557 மேலதிக வாக்குகளைப்பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியிருந்தது.

நேற்றுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், ஒரு சில தொகுதிகளைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியைவிட ஆகக்குறைந்தது 10 ஆயிரத்திற்கும் அதிகமான மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருக் கிறது.

வெல்லவாய தொகுதியில் 37,880 மேலதிக வாக்குகளை சுதந்திர முன்னணி பெற்றிருக்கிறது. இந்தத் தொகுதியில் முன்னணி 50,073 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி 12,199 வாக்குகளை மட்டுமே எடுத்துள்ளது. அதேபோன்று தங்காலை தொகுதியில் 29115 வாக்குகளை முன்னணி மேலகதிகமாகப் பெற்றுள்ளது. அதேபோன்று பெலியத்த, திஸ்ஸமஹாராமை, மாவத்தகம, கலவான, ஹிரியாலை, முல்கிரிகல, வத்தேகம, வெலிகம, தெனியாய, அக்குரஸ்ஸ, பல்மடுல்ல, அக்மீமன, ஹக்மன, கம்பஹா, தெவிநுவர உள்ளிட்ட தொகுதிகளில் கூடுதல் மேலதிக வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியை ஈட்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும்பார்க்க மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந் துள்ளது.

என்றாலும் கொழும்பு வடக்கு தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி 30825 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. இங்கு 14,849 மேலதிக வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.

தவிரவும் ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் ஆளுந்தரப்பைவிட 50 வீதம் குறைவான வாக்குகளையே அக்கட்சி பெற்றுள்ளது.

இதனிடையே கடந்த நாடாளுமன்றத்தில் 39 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஜே.வி.பி.யை இந்தத் தேர்தலில் நிராகரித்துள்ளார்கள்.

நேற்று மாலை வரை வெளியான முடிவுகளின்படி ஜனநாயக தேசிய கூட்டமைப்புக்கு களுத்துறை மாவட்டத்தில் ஒரேயொரு உறுப்பினர் தெரிவாகியுள்ளார். சகல தொகுதிகளிலும் சுமார் இரண்டாயிரத்திற்கும் குறைவான வாக்குகளையே இந்தக் கூட்டணி பெற்றுள்ளது. இதனால், சிறையில் வாடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாராளுமன்றக் கனவு தவிடுபொடியாகியுள்ளது.

இதேவேளை, கடந்த நாடாளுமன்றத்தில் 22 ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலும் இந்தத் தேர்தல் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிரிந்து சென்று ஆளுந்தரப்பில் சிலர் இணைந்தும், தனித்தும் போட்டியிட்டனர்.

இதனால், முன்னாள் உறுப்பினர்கள் பலர் பாராளுமன்ற வாய்ப்பை இழந்துள்ளனர். பிந்திய செய்திகளின்படி 15க்கும் குறைவான ஆசனங்களையே தமிழரசுக்கட்சி (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு) பெற்றுள்ளதெனத் தெரியவருகிறது.

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து புதிய இடதுசாரி முன்னணியில் போட்டியிட்ட எம். கே. சிவாஜிலிங்கம், ரெலோ சிறிகாந்தா ஆகியோர் படுதோல்வியைத் தழுவியுள்ளனர். மேலும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைக் புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்.(நாபா) மற்றும் தமிழ் சுயேச்சைக் குழுக்கள் என்பவற்றில் போட்டியிட்ட எவரும் கணிசமான வாக்குகளைக்கூடப் பெறத் தவறியுள்ளனர்.

மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட மூவரும் வெற்றிபெற் றுள்ளனர்.

மலையக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட எந்தவொரு தமிழரும் தெரிவு செய்யப்படவில்லை. பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் உட்பட முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட தமிழர்களுள் இருவர் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். கொழும்பிலிருந்து சென்று கண்டியில் போட்டியிட்ட மனோ கணேசன் தோல்வியடைந்துள்ளார். கொழும்பில் அவர் நிறுத்திய இரண்டு வேட்பாளர்களும் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.

சுயேச்சைக் குழுக்கள் 301 போட்டியிட்ட போதிலும் எந்தவொரு குழுவிலும் உறுப்பினர்கள் எவரும் தெரிவாகவில்லை. அனைத்துக் குழுக்களும் கட்டுப்பணத்தை இழந்துள்ளன.

பொதுவாக இந்தத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவடைந்துள்ளது. இரு சமூகங்களிலும் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களும் தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக பிரதியமைச்சர்கள் கே. ஏ. பாயிஸ், பெ. இராதாகிருஷ்ணன், வடிவேல் சுரேஷ், அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி முதலானோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

இந்நிலையில், ஏழாவது பாராளுமன்றத்துக்கான முதலாவது அமர்வு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. புதிய அமைச்சரவை புத்தாண்டின்போது சத்தியப்பிரமாணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

2010.பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்

2010.பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் .20 .மாவட்ட முடிவுகள்

ஐ ம சு கூ .117 .ஆசனத்தை பெற்றுள்ளது

ஐ தே கட்சி .46 .ஆசனத்தை பெற்றுள்ளது

தமிழரசு கட்சி .12 .

ஐ தே கூ .05 . ஆசனத்தை பெற்றுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

2010.பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்



புத்தளம் மாவட்டம் : இறுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 167,769 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 81,152 வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.

.6 .
.2 .


கம்பஹா மாவட்டம் : இறுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 589,476 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 266,523 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.
.12 .
.05 .


திகாமடுல்ல மாவட்டம் : இறுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 132,096 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 90,757 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.

.4 .
. 2.


மட்டக்களப்பு மாவட்டம் : இறுதி முடிவுகள்

தமிழரசுக் கட்சி மொத்தமாக 66,235 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 62,009 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
.3 .
.1 .


நுவரெலிய மாவட்டம் : இறுதி முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாக 149,111 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 96,885 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.
.5 .
.2 .
யாழ்ப்பாண மாவட்டம் : இறுதி முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி மொத்தமாக 65,119 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 47,622 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 12,624 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

.5 .
.3 .
.1 .

வன்னி மாவட்டம் : இறுதி முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி மொத்தமாக 41,673 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37,522 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 12,783 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன

.3 .
.2 .
. 1.

கொழும்பு மாவட்ட இறுதி முடிவுகள்

மொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 480,896 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய முன்னணி 339,750 வாக்குகளைப் பெற்று 07 ஆசனங்களையும் ,ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 110,683 வாக்குகளைப் பெற்று இரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
.10 .
.07 .
. 2.

மேலும் இங்கே தொடர்க...

ததேகூ வெற்றி : மன்னாரில் வெற்றி விழாக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோர் வெற்றியீட்டியதையடுத்து மன்னாரின் பல பாகங்களிலும் வெற்றி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...