10 மார்ச், 2010

பொட்டு அம்மானுடன் தொடர்புகளை பேணிய சுங்க உத்தியோகத்தர்கள் கைது



தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை காலப் பகுதியில் குறித்த இரு சந்தேக நபர்களும் பொட்டு அம்மானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை அனுப்பி வைத்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பொருட்களை வன்னிக்கு எடுத்துச் செல்ல விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றில் முகவர்களை புலிகள் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அதிக விலைக்கு அரிசியை விற்கும் வர்த்தகர்க நிலையங்கள் இன்று முற்றுகை:பந்துல


அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலைக்கு அரிசியை விற்கும் வர்த்தகர்களைத் தேடிக்கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

"முன்வரும் பண்டிகைக் காலங்களில் பொது மக்களுக்கு தாராளமாக அரிசி கிடைக்கக் கூடிய சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்துள்ளது. இக்கால கட்டத்தில் எவ்வித விலை அதிகரிப்பும் ஏற்பட வழியில்லை.

அரிசியைப் பதுக்குவோர் மற்றும் அதிக விலையில் விற்போர் ஆகியோரைக் கண்டு பிடிக்க நாளை முதல் விசேட நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் எவ்வித அரசியல் பாகுபாடுகளும் காட்டப்படமாட்டாது" என்றும் அவர் கூறினார். _
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் தேர்தலில் பதிலளிக்கவேண்டும்: ஜனாதிபதி



சர்வதேச மட்டத்தில் இன்று எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வலஸ்முல்லவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெலிஅத்த தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் கூறியதாவது,

"ஒருமைப்பாட்டைக் கொண்ட மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நாடு ஒன்றையே கடந்த 2005 ஆம் ஆண்டு என்னிடம் எதிர்பார்த்தீர்கள். அந்த வகையில் 30 வருட பயங்கரவாதத்தை குறுகிய காலத்துக்குள் முறியடிக்க எம்மால் முடிந்தது.

உலகின் பிரபல நாடுகளில் நிலவும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் அதிகாரமிக்க அந்த நாடுகள் இன்னும் போரிட்டு வருகின்றன. சில நாடுகள் பயன்படுத்திய ஆயுதங்கள் காரணமாக இன்றும்கூட பிறக்கும் குழந்தைகள் விகாரமாக பிறக்கின்றன.

எனினும் நாங்கள் சிவிலியன்களை பாதுகாத்த வண்ணமே இந்த மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டோம். ஆனால் இன்று எமக்கு சர்வதேச மட்டத்தில் பிரச்சினை வந்துள்ளது. இவற்றுக்கு எதிர்வரும் தேர்தலின்போது நாட்டு மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

நாங்கள் யுத்தத்தை செய்கின்ற நிலையிலேயே அபிவிருத்திக்கான பின்னணியை உருவாக்கினோம். சில பிரதேச சபை உறுப்பினர்கள் தங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்ய 500 இலட்சங்களுக்கும் அதிகமாக செலவழித்துள்ளனர்.

நாங்கள் தேர்தல் குறித்து சிந்திக்காமல் அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்களை எடுத்தோம். எனவே எமது நேர்மையான தீர்மானங்கள் காரணமாக மக்கள் எம்முடன் இணைந்துகொண்டனர்.

எமது இந்த முயற்சிகளின்போது பலர் காலைவாரினர். ஆனால் நாங்கள் சவால்களை வெற்றிகொண்டோம். இன்று நாடளாவிய ரீதியில் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. கொழும்பில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிராம மக்களுக்கு சேவையாற்றக்கூடிய அரசியல்வாதிகளை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்." எனத்தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி இலங்கை விஜயம்




பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி பீட்டர் ரெக்கட்ஸ் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

உலகத் தமிழ் பேரவை மாநாடு தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தீர்த்து கொள்வதே இவரது விஜயத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

மனித உரிமைகள் விவகாரம்: ராஜபக்ஷே மீது மூன் புகார்








ஐ.நா: இலங்கையில் வல்லுனர் குழுவை அமைத்து மனித உரிமை மீறல் நடந்ததா, இல்லையா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளித்தால் தான் ராஜபக்ஷே அரசு சொல்வதை நம்பமுடியும் என, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் கண்டிப்புடன் கூறினார்.


இலங்கையில் கடந்த ஆண்டு புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் பலர் அரசு படைகளிடம் சரணடைந்தனர். இச்சண்டையின் போது சரணடைய வந்த ஆயிரக்கணக்கானவர்களை இலங்கை படையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. புலிகளுடன் சண்டை முடிந்த பின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள லட்சக்கணக்கில் வாழும் தமிழர்களின் நிலையை ஆராய்வதற்காக ஐ.நா., பொதுச் செயலர் கொழும்பு வந்தார். தமிழ் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டார். சர்வதேச மனித உரிமை அமைப்பின் விதிமுறைகளை பின்பற்றும் படி அதிபர் ராஜபக்ஷேவை, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் அப்போது கேட்டு கொண்டார். இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடர்வதாக செய்திகள் வெளியாயின. எனவே, இது குறித்து ஒரு குழுவை அமைத்து விசாரிக்கும் படி பான்-கி-மூன் கேட்டு கொண்டார். இதற்கு, ராஜபக்ஷே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.


"கடந்த மே மாதம் இலங்கையில் சண்டை முடிந்த பிறகு ராஜபக்ஷே, என்னுடன் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் பல உறுதி மொழிகளை அளித்தார். ஆனால், இந்த உறுதி மொழியில் பாதிக்கும் விஷயங்கள் குறித்து இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. "முக்கிய வல்லுனர்களை கொண்ட குழுவை அமைத்து மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்தால் தான் ராஜபக்ஷே சொல்வது போல மனித உரிமை மீறல் ஏதும் நடக்கவில்லை என்பதை, நாங்கள் நம்ப முடியும். "எனவே, இந்த குழுவை அமைப்பது குறித்து ராஜபக்ஷேவுடன் பேச்சு நடத்துவதற்காக ஐ.நா., அரசியல் விவகாரத்துறை செயலர் லியான் பொஸ்கோவை விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன்' என, பான்-கி-மூன் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

பொது மக்களுடன் நல்லுறவு பேண யாழில் இராணுவ அலுவலகம்

பொது மக்களுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாண த்தில் நேற்று அலுவலகமொன்றை திறந்துள்ளது.

இராணுவ தளபதி லெப்டினெட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் உத்தரவின்பேரில், பாதுகாப்பு படைகளின் யாழ். தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க இந்த அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காண இந்த அலுவலகம் உதவும் அதேவேளை, இங்கு பொதுமக்கள் பாதுகாப்பு படையின் யாழ். தளபதியையும் சந்தித்து பேச முடியும். யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கத்துடனேயே இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

மகா சிவராத்திரி தினம்; ஒலிபெருக்கியை பாவிக்க பொலிஸாரிடம் அனுமதி பெறலாம்




மகா சிவராத்திரி தினத்தன்று இரவில் ஒலிபெருக்கியைப் பாவிப்பதற்குப் பொலிஸாரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள முடியுமென்று அகில இலங்கை இந்து மாமன்றம் அறிவித்துள்ளது.

சகல இந்து ஆலயங்களும், அமைப்புகளும் தங்கள் பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்கு விண்ணப்பித்து, ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியுமென மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு போலவே இவ்வருட மஹா சிவராத்திரி தினமான 13 ம் திகதி சனிக்கிழமையன்று சகல இந்து ஆலயங்களிலும் இரவு முழுவதும் ஒலிபெருக்கி பாவிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தது.

இந்த வேண்டுகோளையடுத்து, மாமன்றம் பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்ட போது, இது சம்பந்தமான அறிவுறுத்தல்கள் சகல பொலிஸ் நிலையங்களுக் கும் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

எனவே, சகல இந்து ஆலயங்களும் தங்கள் பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு, உரிய வகையில் விண்ணப்பம் செய்து இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம் என இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் கந் தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

69 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்







அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 69 மேலதிக வாக்குக ளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்கு களும் கிடைத்தன.

பிரதி பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்புகள் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்கு பண்டார தலைமையில் நடை பெற்றது.

நேற்று சபையிலிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி. க்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

இவர்களுடன் ஜே. வி. பி. உறுப் பினர்களும், ஐ. தே. கவினரும் எதிர் த்தே வாக்களித்தனர்.

அவசரகாலச் சட்டத்துக்கு ஆதர வாக தொடர்ந்தும் ஆதரவளி த்து வாக்களித்து வந்த ஜே. வி. பி.யினர் முதல்முறையாக எதிர்த்து வாக்களி த்தனர். சபைக்குள் மனோ கணே சனுடன் ஐ. தே. க. உறுப்பினர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிஎந்தவொரு வெளிநாட்டிற்கும் நாம் அடிமை அல்ல


பிஎந்தவொரு வெளிநாட்டிற்கும் நாம் அடிமை அல்ல

மக்களை வாட்டி வதைக்க எந்தச் சட்டத்தையும் அரசு அமுல்படுத்துவதில்லை



எமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல. அரசுக்கு எதிரான சக்திகளுக்கும், நாடுகளுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக வேலி கட்ட வேண்டும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக நேற்று சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது.

பிரதி பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்காக பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார். பிரதமர் தொடர்ந்தும் பேசும் போது :-

அவசரகாலச் சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எந்தளவு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

வடக்கில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்கள் இன்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். பெரும் சுமையிலிருந்து விடுபட்டதைப் போன்று உணர்கிறார்கள். இவ்வாறான ஒரு சுமையை மீண்டும் மக்களின் தலையில் சுமத்த நாம் விரும்பவில்லை.

நாட்டையும், சமுதாயத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த புலிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகளின் பிஉறுமல்கள்பீ ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சற்று மாறுதலாக புலிகளின் புள்ளிகளின் நிறம் மட்டும் இன்று மாறியிருக்கிறது.

மனித உரிமைகள் பேணப்படுவது குறித்து எம்மிடம் கேள்விகள் கேட்பதன் ஊடாக எமது சுதந்திரத்தில் தலையீடு செய்கிறார்கள்.

நாம் எந்தவொரு நாட்டினதும் அடிமையல்ல. எந்தவொரு நாட்டினதும் காலனித்துவ நாடும் அல்ல. நிலைமை இவ்வாறு இல்லாவிடினும் சிலர் இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கி றார்கள்.

நாட்டின் நன்மைக்காக, நாட்டு மக்களின் நன்மைக்காக எடுக்கப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கைக்கும் பொது இணக்கப்பாடு இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

நாட்டின் மீதும், மக்களின் மீதும் பற்றுள்ளவர்கள் என நீங்கள் நினைப்பீர்களா னால் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக இருப்பீர்களா? என்பதை கேட்க விரும்புகிறேன்.

இந்த நாட்டின் துரதிஷ்டம் என்னவெனில், கட்சி, நிறம், கொள்கை என்பவற்றால் நாட்டிற்கு நன்மை பயக்கும் தீர்மானங்களுக்கு பொது உடன்பாடு காண முடிவதில்லை.

இவ்வாறான குறுகிய நோக்கங்களால் எமது நாட்டுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகள் பலமடைந்து வருகின்றன. எனினும், நாம் இன்னும் பிரிந்து நிற்கி றோம். இவைதான் நாம் முகம் கொடுத்து வரும் துரதிஷ்டவசமான நடவடிக்கைகள், எனினும், எமது புலனாய்வுப் பிரிவு இன்னும் தனது கடமையை செய்து வருகிறது.

மக்களை வாட்டி வதைப்பதற்காக அரசு எந்த சட்டத்தையும் நடைமுறைப்ப டுத்தவில்லை. ஊடக அடக்குமுறை, தொழிற்சங்க உரிமைகளை அடக்குவதற்காக அவசரகாலச் சட்டத்தை நாம் பயன்படுத்தியதில்லை. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவற்றை முழுமையாக நிராகரிக்கிறேன்.

நாட்டின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்திற்கும் எம்மால் அனுமதி வழங்க முடியாது. பொறுப்புள்ள ஒரு அரசு என்ற வகையில் இதனை அனுமதிக்க முடியாது.

அரச விரோத சக்திகளுக்குத் தேவையான விதத்தில் தகவல்களை வழங்கும் ஒரு சாராரும் இருக்கிறார்கள்.

இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில பலம்வாய்ந்த நாடுகளும் அமைப்புகளும் இன்று எமது நாட்டுக்கு எதிராக வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

உலக நாடுகளில் புலிகளை பலமடையச் செய்வதற்காக சில குழுக்கள் தொழிற்பட்டு வருகின்றன. ஜேர்மனியில் இவ்வாறான சிலர் கைது செய்யப்பட்டதையும் நீங்கள் அறிவீர்கள்.

வருடக் கணக்காக பின்தள்ளப்பட்டுப் போன எமது நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கையை அரசு செய்து வருகிறது.

இவ்வாறான அபிவிருத்திகளுக்கு பலன் கிடைக்கப் போவது எதிர்காலத்திலேயே. வடக்கு கிழக்கு மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் அவர்களது பிரதிநிதிகளை தெரிவுசெய்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வன்னியில் கைவிட்டு வந்த சொத்துகளை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை




கட்டளைத் தளபதியிடம் பதிவு செய்ய வேண்டுகோள்

* இயல்பு வாழ்வு ஏற்படுத்த அரசுடன் இணைந்த செயற்பாடு

* வன்னியில் தனியான பல்கலைக்கழகம்

* மீள்குடியேறுவோருக்கு 3 1/2 இலட்சம் வீட்டுத் திட்டம்


வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதியில் வளங்களைக் கைவிட்டுவந்த மக்களுக்கு அவர்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாள ரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

மக்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் வன்னி கட்டளைத் தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா கக் கூறிய கிஷோர் எம்.பீ. வாகனங்களின் உரிமையாளர்கள் வன்னி கட்டளைத் தளபதியிடம் தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண் டுள்ளார்.

விபரங்கள் பதிவுசெய்யப்பட்டதும், குறித்த உரிமையாளர்களுடன் சென்று உரிய ஆதாரங்களைக் காண்பித்து வாகனங்களைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் கிஷோர் எம்.பீ. தெரிவித்தார்.

வன்னி மக்களின் வாழ்க்கையை பழைய நிலைக்குக்கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறிய அவர், அரசியல் கொள்கையில் உறுதியாக இருப்பதுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பதே பொருத்தமான நடவடிக்கையாகுமென்றும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கு மூன்றரை இலட்சம் ரூபா வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்குவதுடன், முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை கட்டங்கட்டமாக மீளக்குடியமர்த்துவது அரசியல் கைதிகள் அனைவரையும் மூன்று கட்டங்களாக விடுவித்தல்.

அதாவது பிணையில் விடுவிப்பது, விடுதலை செய்வது, வழக்குத் தொடர்வது என இந்தக் கைதிகளை விடுவித்தல் புனர்வாழ்வளி க்கப்பட்டு வரும் பதினோராயிரம் புலிகள் இயக்க உறுப்பினர்களை சமூகமயப்படுத்துதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படு த்துவது தொடர்பில் அரச உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகக் கூறினார். வன்னி பல்கலைக்கழகம்

மேலும் வன்னிக்கெனத் தனியான ஒரு பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்ப டுகின்றது. நெலுக்குளத்தில் 150 ஏக்கர் காணியில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் முழுமையான ஒரு தனியான பல்கலைக்கழகமாகும்.

அதுபோல் தாதியர் பயிற்சிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என்பவற்றை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த சிவநாதன் கிஷோர் எம்.பீ, கடந்த 33 வருட காலமாக சொல்லொணாத் துக்கங்களை அனுபவித்த மக்கள் இன்று தெளிவை அடைந்துள்ளார்கள். எனவே, இனியும் வீராவேசம் பேசினால் மக்களின் நிலைமை மேலும் அதளபாதாளத்தைச் சென்றடைந்துவிடும். எமக்குக் கொள்கை உண்டு.

வடக்கு, கிழக்கிற்கு ஓர் அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்றும் உறுதியாக உள்ளோம். அதற்கான முழு ஆதரவையும் பெற்றுக் கொடுப்பேன். போராட்டம் நடந்த காலத்தில் அதற்கு வலுச்சேர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தோம். இன்று நிலைமை மாறிவிட்டது. பசியில் வாடிக் கொண்டிருப்பவர்களுடன் தமிஸழத்தைப் பற்றிப் பேச முடியாது என்றும் கிஷோர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...