5 ஜூன், 2011

ஐ.நா. அறிக்கை குறித்து கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை: அமெரிக்கா

இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. அறிக்கை குறித்து அமெரிக்கா மேற்கொண் டுள்ள கொள்கை நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது அப்பாவித் தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியதாகவும் அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. குழுவினரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதற்கு ஆதாரங்களையும் அந்த அறிக்கை கொண்டிருக்கிறது. போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஐ.நா. அறிக்கை குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து ராஜபக்ச அரசு இந்த விஷயத்தில் நம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தெளிவாக தெரிந்த நிலையில்இ அது குறித்து வெளிப்படையான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக