15 ஜூன், 2011

இன்றிரவு பூரண சந்திரகிரகணம்



இன்று இரவு பூரண சந்திர கிரகணம் ஏற்படும் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு 11.52 மணிக்கு ஆரம்பமாகும் கிரகணம் அதிகாலை 3.32 மணிக்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிரகண அதிபதியாக சந்திரன் வருவதால், கிரகணத்துக்குப் பிறகு வரும் காலத்தில் சூறாவளி காற்று வீசும்; நல்ல மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது. இன்றைய சந்திரகிரகணத்தை 21-ஆம் நூற்றாண்டின், அடர் இருள் சந்திர கிரகணம் என்கின்றனர். இதே போன்ற சந்திரகிரகணம் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி ஏற்பட்டது.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது நிகழ்வதே சந்திர கிரகணம். பூமியின் நிழலானது சந்திரனின் மீது விழுவதால், அது மறைக்கப்படுகிறது. அடுத்து இதே போன்ற அடர் சந்திரகிரகணம் 2141 ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இந்திய வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக