லிபிய ஜனாதிபதி கடாபி தனது நாட்டுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து மரணிக்கும் வரை போராடப் போவதாகவும் மரணத்தை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளார்.
மேற்படி தகவல் அடங்கிய அவரது குரல் பதிவை அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பாக்கியுள்ளது.
இக்குரல் பகுதிவில் அவர் தனது ஆதரவாளர்களை திரிபோலியில் உள்ள இல்லத்தில் கூடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்படி தகவலானது கடாபியின் பாப் அல் அஸீசியா இல்ல வளாகத்தில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னரே வெளியாகியுள்ளது.
கடாபியின் இல்ல வளாகத்தை இலக்கு வைத்து நேட்டோ படைகள் நேற்று பல தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேட்டோ படைகள் லிபிய இராணுவத்திற்கெதிரான படைநடவடிக்கைகளை மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பித்தது.
எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதி வரை தனது படை நடவடிக்கைகளை தொடர கடந்த வாரம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக