ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜெனிவா சென்றிருந்த இலங்கை தூதுக்குழுவினர் நேற்று நாடு திரும்பினர்.
தூதுக்குழுவுக்கு தலைமைதாங்கிய பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரே நேற்று நாடு திரும்பினர்.
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விசேட உரையாற்றியிருந்தார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை மற்றும் மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோரை அமைச்சர் சமரசிங்க தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக