21 ஜூன், 2011

இந்திய மீனவர்கள் 23 பேர் கைதுஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 23 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 23 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் மத்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை நேற்றிரவு 11 மணியளவில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் இந்திய மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளர் மார்கண்டேயன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டபோதும் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளும் மன்னார் கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக