12 மே, 2011

ஐ.நா. அறிக்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது: டலஸ்

ஐக்கிய நாடுகள் சபையின் தருஷ்மன் அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தையும் கவலையையும் அளிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நிறுவனமான யுனிசெப் அமைப்பு புலிகள் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்

தருஷ்மன் அறிக்கைக்கு ஆதரவு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறித்து ஆச்சரியமடைகின்றோம் என்பதுடன் கவலையும் அடைகின்றோம். தருஷ்மன் அறிக்கையக்ஷினது பக்கச்சார்பான உள்ளடக்கங்களைக்கொண்டுள்ளது.

அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டோம். எந்தவிதமான அடிப்படையும் அற்ற வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கியமை தொடர்பிலேயே ஆச்சரியமும் கவலையையும் அடைகின்றோம்.

அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நிறுவனமான யுனிசெப் அமைப்பு புலிகள் அமைப்பு தொடர்பில் கடந்த காலங்களில் தெரிவித்துள்ள கருத்துக்களை அனைவரும் பரிசீலனை செய்துபார்க்கவேண்டும்.

அதாவது புலிகள் அமைப்பு சிறுவர்களை போராளிகளாக இணைத்துக்கொண்டதாக யுனிசெப் அறிக்கை ஏற்கனவே தெரிவித்திருந்தது. அது தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தவேண்டியுள்ளது.

மேலும் இவ்வாறு சிறுவர்களை படையில் இணைத்துக்கொண்டதக்ஷிக ஐ.நா. வின் அங்கத்துவ அமைப்பினாலேயே கூறப்படும் புலிகள் அமைப்பை தருஷ்மன் அறிக்கையானது ஒழுக்கமுள்ள அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது. எனவே இது குறித்து நாம் சிந்திக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபை என்பது எமது அமைப்பாகும். அதன் செயலாளர் பான் கீ. மூன் எமது செயலாளர் ஆவார். இந்நிலையில் தருஷ்மன் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மனித உரிமை பேரவை அணிசேரா நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் தெளிவுபடுத்துவோம். வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்துவார் என்று அண்மையில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் ஆக்கபூர்வமான நோக்கங்களை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கும் என்று நம்புவதாகவும் அவ்வறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் பேச்சு நடத்துவதை ஊக்குவிக்கின்றோம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக