12 மே, 2011

ஐ.நா. அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றமைக்கு இலங்கை ஆட்சேபம்

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளமை தொடர்பில் இலங்கை ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன இந்த ஆட்சேபத்தினை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் பாலித கொஹனவிடம் கேள்வி எழுப்பிய போது சர்வதேச மனிதாபிமானிகள் தமது மனச்சாட்சியை தூய்மையாக்க முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் மீதான சுயாதீனமான விசாரணைகள் இலங்கையில் நல்லிணக்க செயற்பாட்டிற்கும் நிரந்தர சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பங்காற்ற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இதேவேளை கொழும்பில் பொதுப் பூங்காக்களின் நிர்வாகத்தை கடற்படையினர் பொறுப்பேற்பது குறித்து இன்னர் சிட்டி பிரஸ் பாலித கொஹனவிடம் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த அவர் படையினர் “ 2 இலட்சம் பேர் வேலையற்று இருக்கின்றனர்.

அப்படையினர் யுத்தத்திற்காகவே திரட்டப்பட்டனர். இப்போது அவர்கள் சிவில் பணிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக