12 மே, 2011

14 குற்றச்சாட்டுக்களின் கீழ் ராஜரட்ணம் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்




இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க செல்வந்தரான ராஜ் ராஜரட்ணம் பங்குச்சந்தை மோசடி தொடர்பிலான வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் நேற்று இடம்பெற்ற இவருக்கெதிரான வழக்கு விசாரணையின்போது 14 குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதுடன் இறுதிப் தீர்ப்பினை ஜூலை மாதம் 29 ஆம் திகதி வெளியிடுவதென 12 பேர் கொண்ட ஜூரிகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி அவருக்கு 15 முதல் 19 வருடங்கள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க பங்குச்சந்தையில் 63.8 மில்லியன் டொலரை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்தமை தொடர்பாகவே இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

130 கோடிக்கும் அதிகமான டொலர் பெறுமதியான சொத்துக்களைக் கொண்டவரான ராஜரட்ணம் பிரபல போப்ஸ் சஞ்சிகையின் உலகின் செல்வந்தர் பட்டியலில் 559 ஆவது இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக