13 ஜனவரி, 2011

இந்தியாவிற்கான கூகுளின் முக்கிய பொறுப்பில் இலங்கை வம்சாவளி தமிழர்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முன்னாள் முகாமைத்துவ இயக்குனரான ராஜன் ஆனந்தன் கூகுளின் இந்திய விற்பனை மற்றும் இயக்கங்களுக்கான உப தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

ராஜன் ஆனந்தனின் தந்தை வி.எஸ். குமார் ஆனந்தன் இலங்கையைச் சேர்ந்தவராவார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தவர் என்பதுடன் பல கின்னஸ் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.

கூகுளானது இந்தியாவில் சுமார் 2000 ஊழியர்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவை வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கிய நாடாக இந்தியா கருதுகின்றது. இந்தியாவின் இணையப்பாவனையாளர்களின் விதம் வருடாந்தம் 50 % ஆக வளர்ந்து வருகின்றது.

கூகுளில் இணைவதற்கு முன்னர் ராஜன் ஆனந்தன் மைக்ரோசொப்ட், டெல், ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக