13 ஜனவரி, 2011

காதலியை கொலைசெய்து சீமேந்தினால் மறைத்த நபர்

கடந்த டிசம்பர் மாதம் காணமல் போன அமெரிக்க லாஸ் வேகாஸ் நடன மங்கை ஒருவரின் உடலானது துண்டுகளாக வெட்டப்பட்டு, பிளாஸ்ரிக் வாளியில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலையுடன் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் அப்பெண்ணின் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளான்.

டிபோரா புலோரஸ் நரஹேஸ் என்ற 31 வயதான அப்பெண் தனது காதலனாலேயே இவ்வாறு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் லாஸ் வேகாஸில் உள்ள பிரபல விடுதியொன்றில் பணிபுரிந்து வந்த நடன மங்கையவார். ஜேசன் கிரிபித் என்ற அவரின் காதலனிற்கும் டிபோராவிற்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தகராறு முற்றியதன் விளைவாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்நபர் தனது காதலியை துண்டு துண்டாக வெட்டியது மட்டுமல்லமால் அதனை இரு வாளிகளில் அடைத்து அதனுள் சீமேந்துக் கலவையை இட்டு மறைத்துள்ளார்.

எனினும் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளை அடுத்து இந் நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக