27 டிசம்பர், 2010

இயற்கை அழிவுகளில் மக்களைப் பாதுகாக்க அரசு திடமான திட்டம் யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு


சுனாமி போன்ற அனர்த்தங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்துகொண்டு அழிவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன நேற்று (26) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

நாட்டுக்குக் கிடைத்த சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் காரணமாகவே, நாட்டை இலகுவில் மீளக் கட்டியெழுப்ப முடிந்ததென்றும் பிரதமர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் இழப்புகளை மீளக் கட்டியெழுப்புவதிலும் இலங்கை முதலிடம் வகிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளின் பாண்ட் வாத்தியம் மற்றும் கலாசார நடன நிகழ்வுகளுடன் பிரதமர் தி.மு. ஜயரத்ன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்பட்டது.

காலை 9.15 மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் யாழ் முற்றவெளியில் வந்திறங்கிய பிரதமர் தி.மு. ஜயரத்னவை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ்.

அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சி நடைபெற்ற வீரசிங்கம் மண்டபத்து க்கு அழைத்து வந்தனர். 9.20 மணியளவில் வீரசிங்கம் மண்டப வாயிலை வந்தடைந்த பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழுவினரை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, பிரதியமைச்சர் டுலிப் விஜேசேகர ஆகியோர் வரவேற்று உடனடியாகவே 9.25க்கு சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகள், மாணவர்களின் கோலாட்டம், சிலம்பாட்டம், காவடியாட்டம், தீப்பந்தம், பொய்க்கால் குதிரையாட்டம், நடனம் என்பனவும் கடற்படை, இராணுவம், விமானப்படை, பாடசாலை மாணவர்களின் பாண்ட் இசையும் அமைந்திருந்தன.

அலங்கார ஊர்திகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இருந்து ஆரம்பமாகி பண்ணை வீதியூடாக இடம்பெற்றது. இவ் அலங்காரப் பேரணி இடம்பெற்றபோது ஆயிரக்க ணக்கான மக்கள் இவ் ஊர்திகளை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இவ் அலங்கார ஊர்தி பவனியை பிரதமர் டி. எம். ஜயரத்ன, அமைச்சர்கள் மகிந்த அமரவீர, டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர்கள் டிலிப் விஜயசேகர, சுஜித் விஜயசுந்தர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஸ்வர், உட்பட பலரும் கண்டு களித்தனர்.

தேசிய பாதுகாப்பு தினத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மிக இனிமையாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களும் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளும் பாடினர். வரவேற்புக் கீதத்தை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவர்கள் இசைத்தனர்.

நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டியில் மாகாண மட்டத்தில் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பரிசளிப்பும் இடம்பெற்றது.

ஞாபகார்த்த மலர், வழிகாட்டி நூல் என்பனவும் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், 2004ம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற சுனாமி அனர்த்தங்களில் 35000 மக்கள் தமது இன்னுயிரை இழந்தனர். பல கோடி ரூபா சொத்துக்கள் இழக்கப்பட்டன. இந்த கோர அனர்த்தம் நாட்டின் பதின்மூன்று மாவட்டங்களில் இடம்பெற்றன. அரசாங்கம் உயிரிழந்தவர்களைவிட சகல இழப்புகளுக்கும் நிவாரணம் வழங்கியுள்ளது. இதற்கு ஜனாதிபதி அவர்களின் தீர்க்கதரிசனமிக்க தலைமைத்துவமும் சிறந்த வழிகாட்டலும் இப்பணியை நிறைவேற்ற உதவியிருந்தது.

நிகழ்வில் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர பிரதியமைச்சர் டுலிப் விஜயசேகர பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள் அஸ்வர், திருமதி விஜயகலா மகேஸ்வரன், மு. சந்திரகுமார், வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க, பிரதியமைச்சர் அப்துல் காதர், யாழ்.

மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த துறுசிங்க, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் ஜயரத்ன சில நிமிட நேரம் தமிழிலும் உரையாற்றியபோது அங்கு குழுமியிருந்த மக்களுக்கு பெரும் வியப்பைக் கொடுத்தது. அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எந்தவித பாரபட்சமுமின்றி நிவாரணப் பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டமையால் பணிகள் துரிதமாக இடம்பெற்றன.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆறுதல் அடைந்தனர். இதன் காரணமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழமையான வாழ்க்கைக்குத் திரும்ப முடிந்தது. உலகத்தில் அதுவும் ஆசிய மக்கள் மத்தியில் சுனாமி நிவாரணப் பணிகளை இலங்கைதான் சிறப்பாகச் செய்துள்ளது என்ற உலகத்தின் பாராட்டுக் கிடைத்தது.

இன்றைக்கு நாட்டில் சமாதானம் உருவாகியுள்ளது. இந்த நாடு பல்லின மக்கள் வாழும் நாடாகும். அவர்கள் வெவ்வேறு மதங்கள், கலாசாரம், பண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் எல்லோரும் ஐக்கியப்பட்டு தாம் வாழும் நாட்டை சுபிட்சமிக்க நாடாக மாற்ற ஒற்றுமைப்பட்டு உழைத்து வருகிறார்கள். ஜனாதிபதி அவர்கள் கூட சகல மக்களையும் தன் பிள்ளைகளாக சிந்தித்து அபிவிருத்தியில் சமவாய்ப்பு வழங்கி வருகிறார்.

புதிய வரவு செலவுத் திட்டத்தில் கூட மற்றைய மாவட்டங்களைவிட வடக்குக் கிழக்குக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பொருளாதார சுபிட்சமிக்க பூமியாக மாறும் நிலை உருவாகியுள்ளது. நாட்டில் வடக்குக் கிழக்கு உட்பட 200 தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதியின் மதிநுட்பமான தலைமைத்துவத்தால் கொடிய பயங்கரவாதம் அழிக்கப்பட்டதால் நாட்டில் வாழும் +(யிஙுஜி மக்களும் மகிழ்ச்சியாக வாழும் நிலையை ஜனாதிபதி அவரஙகளஙஏற்படுத்தித் தந்துள்ளார். இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் சவால் ஆசியாவில் இலங்கையை பொருளாதார சுபிட்சமிக்க நாடாக கட்டியெழுப்புவதுதான்.

அதற்கு நாம் அனைவரும் எமது நாடு என்ற சிந்தனையில் ஒற்றுமைப்பட்டு எல்லோரும் எல்லா நலன்களும் பெற்றவர்களாக வாழ்வதுதான். அதற்கான கால்கோளை ஜனாதிபதி அவர்கள் எமக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக